ETV Bharat / state

சென்னையில் இடி மின்னலுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! - TN Weather Update - TN WEATHER UPDATE

Chennai Meteorological Department: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 3:05 PM IST

சென்னை: தமிழக உள்மாவட்டங்களில் அநேக இடங்களிலும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: ராணிப்பேட்டை 13செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; சேலம் 13செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; திருவண்ணாமலை 10செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; வேலூர் 8செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; விருதுநகர் 7செ.மீ முதல் 3செ.மீ வரையிலும்; கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் மற்றும் புதுக்கோட்டை 7செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; கரூர், திருச்சி, நீலகிரி மற்றும் காஞ்சிபுரம் 6செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; மதுரை 6செ.மீ முதல் 2செ.மீ வரையிலும் மழையின் அளவு பதிவாகியுள்ளது.

அதேபோல, திருப்பத்தூர் 5செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; நாமக்கல் மற்றும் பெரம்பலூர் 4செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர், ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் 3செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; சிவகங்கை 3செ.மீ வரையிலும்; தூத்துக்குடி 2செ.மீ வரையிலும்; ஈரோடு, தேனி, தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் 1செ.மீ அளவும் மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சமவெளிப்பகுதிகளில் பதிவான வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் 38.0 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோடு மாவட்டத்தில் 19.0 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆக6) மற்றும் நாளை (ஆக.7) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல இன்று (ஆக.6) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் நாளை (ஆக.7) கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதுமட்டும் அல்லாது, ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று (ஆக.6) மற்றும் நாளை மறுநாள் (ஆக.8) மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

இதுமட்டும் அல்லாது நாளை (ஆக.7) மற்றும் ஆகஸ்ட் 09ஆம் தேதி, 10ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்: இன்று (ஆக.6) முதல் 10ஆம் தேதிவரை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: இன்று (ஆக.6) முதல் 10ஆம் தேதிவரை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தஞ்சையில் பாதாள சாக்கடை பணியின் போது தொழிலாளி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.