தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் முரசொலி தேமுதிக வேட்பாளர் சிவநேசனை விட 3,19,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்..
வ.எண் | வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | முரசொலி | திமுக | 5,02,245 |
2 | சிவநேசன் | தேமுதிக | 1,82,662 |
3 | எம்.முருகானந்தம் | பாஜக | 1,70,613 |
4 | ஹிமாயூன் கபீர் | நாதக | 1,20,293 |
- 5மணி நிலவரப்படி, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி 478854 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.முருகானந்தம் 163600 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிவநேசன் 173964 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஹிமாயூன் கபீர் 113477 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக சார்பில் போட்டியிட்ட முரசொலி தேமுதிக வேட்பாளர் சிவநேசனை விட 304890 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி 403775 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.முருகானந்தம் 139790 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிவநேசன்150602 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஹிமாயூன் கபீர் 97334 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக சார்பில் போட்டியிட்ட முரசொலி தேமுதிக வேட்பாளர் சிவநேசனை விட 253173 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் - 4.05PM நிலவரம்
- 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி 356012 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.முருகானந்தம் 122320 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிவநேசன் 133106 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஹிமாயூன் கபீர் 85831வாக்குகளும் இம்முறை பெற்றுள்ளனர் - 3.30 PM நிலவரம். இத்தேர்தலில் மொத்தம் 10,24,949 (68.27%) வாக்குகள் பதிவாகின.
2019 தேர்தல் நிலவரம்: கடந்த 2019 தேர்தலில், 5,88,978 (55.60%) வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அபார வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் நடராசன் 2,20,849 (20.85%) வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளர் முருகேசன் 1,02,871 வாக்குகளை (9.71%) பெற்றார். இத்தேர்தலில் 10,59,223 வாக்குகள் (74.4%) பதிவாகின.
இதையும் படிங்க: தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024: தஞ்சையில் வெற்றிக்கொடி நாட்டப் போவது யார்? - Lok Sabha Election 2024