ETV Bharat / state

“பச்சிளம் குழந்தைகளை வளர்க்க முடியாவிட்டால் அரசிடம் கொடுங்கள்"-தஞ்சை ஆட்சியர் உருக்கமான வேண்டுகோள்! - THANJAVUR NEW BORN IN BOX ISSUE

பச்சிளம் குழந்தையை வளர்க்க இயலாத தாய்மார்கள் குழந்தைகளை எதும் செய்துவிடாமல் அதிகாரிகளிடம் ஒப்படையுங்கள் அரசு வளர்க்கும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கோரிக்கை வைத்துள்ளார்.

தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்
தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2024, 1:37 PM IST

தஞ்சாவூர்: பச்சிளம் குழந்தையை வளர்க்க இயலாத தாய்மார்கள் குழந்தைகளை எதும் செய்துவிடாமல் தொட்டில் குழந்தை திட்டத்தில் அரசிடம் ஒப்படையுங்கள் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் சேதுபாவாசத்திரம் அருகே ஆண்டிக்காடு கிராமத்தில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கடந்த நவம்பர்.5 ஆம் தேதி பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த குணபாலன் என்பவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து, பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்,“சேதுபாவாசத்திரம் பகுதியில் பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. குழந்தையின் தாயார் யார் என விசாரணை நடத்தி வருகிறோம்.

இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?.. மாவட்ட தலைவர் கொடுத்த அப்டேட்!

பிறந்த பச்சிளம் குழந்தையை வளர்க்க விரும்பாதவர்கள் தயவு செய்து குழந்தையை ஏதும் செய்து விட வேண்டாம். அதிகாரியிடம் தொடர்பு கொண்டு விபரங்களை கூறுங்கள். உங்களது தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படும். அவ்வாறு தெரிவிக்க விருப்பம் இல்லை எனில் தஞ்சை இராசா மிராசுதார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்கு தொட்டில்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தையை போட்டு விடலாம்.

அந்த தொட்டில்களில் குழந்தையை போட்டு விட்டு சென்றால் அந்த குழந்தையை வளர்த்து பின்னர் அரசு காப்பகத்தில் வைத்து பராமரிப்போம். ஆகவே யாரேனும் தயவு செய்து பிறந்த பச்சிளம் குழந்தையை வளர்க்க முடியவில்லை என்றால் குழந்தையை எதுவும் செய்து விட வேண்டாம். எங்களிடம் ஒப்படையுங்கள்” என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.