ETV Bharat / state

கனமழையால் வெள்ளநீரில் மூழ்கிய நெற் பயிர்கள்... “பலமுறை கூறியும் வடிகாலை தூர்வாரவில்லை”-கதறும் விவசாயிகள்..

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பெய்த கனமழையில் விவசாய நிலங்களில் வடிகால் முறையாக தூர்வாரப்படாததால் 2300க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவாரூரில் குளம் போல் காட்சியளிக்கும்  விவசாய நிலம்
திருவாரூரில் குளம் போல் காட்சியளிக்கும் விவசாய நிலம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 2:43 PM IST

தஞ்சாவூர்/திருவாரூர்: தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான புத்தூர், உக்கடை, கோவிந்தநல்லூர், விழுதியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்வாராத காரணத்தால் மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து குளம் போல் காட்சியளிக்கிறது. இதில் நடவு செய்த இளம் பயிர்கள் மற்றும் 30 நாள் பயிர்கள், நீரில் மூழ்கி இருப்பதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தஞ்சாவூரில் மேலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அரசு போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இது குறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் விவசாயி செந்தில்குமார், “வாய்க்கால்களை தூர்வாரக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தற்போது விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளோம். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: பயிர்களை தாக்கும் மக்காச்சோள படைப்புழு.. பாதிப்பை தடுப்பது எப்படி? - வேளாண் வல்லுநர் கூறும் ஆலோசனைகள்!

இதேபோல், திருவாரூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்த வந்த நிலையில் நெம்மேலி, அதம்பார், வடகுடி, கம்மங்குடி, நரிக்குடி, ஜெகநாதபுரம், வேலங்குடி, திருக்கொட்டாரம், பாவட்டகுடி, நாகராஜன் கோட்டகம், கள்ளிக்குடி, முகந்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட 2300 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

இது குறித்து, பேசிய திருவாரூர் விவசாயி முத்தையன், “கனமழை காரணமாக நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதில் 45 நாட்களான சம்பா நெல் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு இதுவரை ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை செலவு செய்துள்ளோம். கடன் வாங்கி பயிரிடுள்ளோம்.

தொடர்ந்து, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறும் நிலையில் அரசு வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்க வேண்டும். அதற்கு கிராமங்களில் உள்ள நெம்மேலி, அதம்பாரில் உள்ள அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் முழுமையாக தூர்வாரப்பட வேண்டும். மேலும் உடனடியாக வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.