ETV Bharat / state

தாளவாடியில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம்; பிரேத பரிசோதனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு! - Thalavadi elephant attack - THALAVADI ELEPHANT ATTACK

Talavadi elephant attack: தாளவாடியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில், யானைகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும் வரை மூதாட்டி உடலை பிரேதப் பரிசோதனை செய்ய விடமாட்டோம் எனக் கூறி, மருத்துவமனை முன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Thalavadi elephant attack
Thalavadi elephant attack
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 6:23 PM IST

Thalavadi elephant attack

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருக்கிறது. இங்கு காட்டு யானைகள், பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து, விவசாயத் தோட்டங்களில் உள்ள பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

விவசாய நிலங்களுக்கு இரவு நேரக் காவலுக்குச் செல்லும் விவசாயிகளை யானை தாக்கி உயிரிழப்பது அப்பகுதி மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், இன்று காலை நெய்தாளபுரத்தில் தோட்டத்துக்குச் சென்ற மூதாட்டி காளம்மாவை (70), அவ்வழியாகச் சென்ற யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் ஊருக்குள் புகுந்து காளம்மாவை தாக்கிய யானையை காட்டுக்குள் விரட்டினர்.

பின்னர், உயிரிழந்த காளம்மாவின் உடலை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு வந்த விவசாயிகள், யானையால் கொல்லப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, யானைகளை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கும் வரை பிரேதப் பரிசோதனை செய்ய விடமாட்டோம் எனக் கூறி, தாளவாடி அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் சதீஸ், ராமலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 4 மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தையில், உயிரிழந்த காளம்மாள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், யானைகள் புகாதபடி அகழி வெட்டப்படும் என உறுதியளித்ததையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதையடுத்து, யானை தாக்கி கொல்லப்பட்ட காளம்மாளின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த இரு மாதத்தில் யானை தாக்கியதில் 2 விவசாயிகள் இறந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு! - Wild Elephant Attack

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.