ETV Bharat / state

தைப்பூசத் திருவிழா.. பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏந்தி சூரிய பகவான் தரிசனம்! - Thaipusam Festival

Palani Thaipusam: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஜன.25) அதிகாலை பழனி சண்முக நதி, இடும்பன்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏந்தி அரோகரா கோசத்துடன் சூரிய பகவானை வணங்கி வழிபாடு செய்தனர்.

பழனி முருகன் கோயில்
தைப்பூசத் திருவிழா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 11:54 AM IST

பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏந்தி சூரிய பகவான் தரிசனம்

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி, பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த ஜனவரி 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரை வந்த வண்ணம் உள்ளனர்.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை, சமேதர் முத்துக்குமார சுவாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து, 6ஆம் நாளான நேற்று வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக வருகை புரிந்த திரளான பக்தர்கள், மலை அடிவாரத்தில் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து, மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி உற்சாகமாக தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சண்முக நதி, இடும்பன்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏந்தி அரோகரா கோசத்துடன் சூரிய பகவானை வணங்கி வழிபாடு செய்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால், சாமி தரிசனத்திற்காக மலை மீது செல்லக்கூடிய பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் யானை பாதை வழியாக மேலே அனுமதிக்கப்பட்டு, படிப்பாதை வழியாக கீழே இறங்கிச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும், இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற கூடிய தைப்பூசத் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பழனிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்காக பழனியில் இருந்து தமிழகம் முழுவதும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.