சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதியை நாளை மாலை 3 மணிக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன்படி காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை, ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
கடந்த 2019 தேர்தலின் போது காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறையும், கரூர் தொகுதிக்கு பதிலாக, கடலூர் அல்லது நெல்லை தொகுதியை ஒதுக்க திமுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கரூர் எம்பி ஜோதிமணி, "கரூரில் மீண்டும் நான் போட்டியிடுவது உறுதி" எனக் கூறியிருந்த நிலையில் கரூர் தொகுதியில் திமுகவே நேரடியாக களம் காண இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தேர்தல் தேதி அறிவித்தால் பொன்முடி பதவியேற்பில் சிக்கலா? - சபாநாயகர் அளித்த விளக்கம்