ETV Bharat / state

உச்சகட்ட டென்க்ஷன்.. நடந்தே செல்லும் டிஐஜி, எஸ்பி.. உற்றுநோக்கும் டிஜிபி.. நெல்லை ரிப்போர்ட்..! - deepak raja funeral

DEEPAK RAJA: நெல்லையில் தீபக் ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அணிவகுத்து செல்வதால் சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்வத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தீபக் ராஜா உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட புகைப்படம்
தீபக் ராஜா உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 5:30 PM IST

திருநெல்வேலி: நெல்லையைச் சேர்ந்த தீபக் ராஜா (30) கடந்த 20ஆம் தேதி தனது காதலியுடன் கே.டி.சி நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவருந்த சென்ற போது ஒரு கும்பலால் மிக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை உலுக்கியது. தீபக் ராஜா மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்து சிறைக்கும் சென்றுள்ளார். மேலும், தனது சமூக மக்களுக்காக பேசும்போது ஆவேசமாகவும் காணப்பட்டுள்ளார்.

இதனால், சாதி ரீதியான மோதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் கொலைக்கான காரணம் தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைதான நிலையில் கொலையில் நேரடியாக சம்மந்தப்பட்ட மேலும் நான்கு பேர் நேற்று கைதாகினர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் வடநாடு அருகே வடிவேல் முருகன் என்பவரது கொலைக்கு பழித்தீர்க்கும் விதமாக கூலிப்படை தலைவன் நவீன் என்பவர் மூலம் தீபக் ராஜாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கடந்த 7 நாட்களாக போராடி வந்த உறவினர்கள் நேற்று அவரது உடலை வாங்கிக் கொள்ள சம்மதித்தனர்.

இந்நிலையில், இன்று தீபக் ராஜா உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி தீபக்ராஜாவின் ஆதரவாளர்கள் பலநூறு பேர் மருத்துவமனையில் திரண்டனர். சுதாரித்துக்கொண்ட காவல்துறை அரசு மருத்துவ கல்லூரியின் பிணவறை சுற்றி துணை ஆணையர்கள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டது.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீபக் ராஜின் உடல் அவரது சொந்த ஊரான வாகை குளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. உடல் கொண்டு செல்லப்படும் முக்கிய சாலைகள் மற்றும் வாகை குளத்தில் சுமார் 2000 போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் எதிர்பார்த்தபடி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தீபக் ராஜா உடல் கொண்டு செல்லப்படும் வாகனத்தை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பின் தொடர்ந்தனர். உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து 3 மணி நேரமாகியும் நெல்லையை தாண்டாததால் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

எந்நேரமும் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு கவசங்களுடன் போலீசார் பின் தொடர்ந்தனர். குறிப்பாக நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் ஆகிய இருவரும் அதிரடியாக சக போலீசாரோடு வியர்த்து விறு விறுக்க சாலையில் நடந்தபடி பாதுகாப்பு பணியை கண்காணித்தனர். பிரச்சினை ஏற்படாமல் இருக்க இருவரும் சக அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியபடி வாகனத்தை பின் தொடர்ந்தனர்.

இந்நிலையில், தீபக் ராஜா உடல் கொண்டு செல்லப்படும் வீடியோ காட்சியை டிஜிபி சங்கர் ஜிவால் சென்னையில் இருந்தபடி கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக காவல்துறை சார்பில் நேரலையில் வீடியோ காட்சி எடுத்து அனுப்பப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் ஏற்கனவே சாதி மோதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் தீபக் ராஜா கொலை ஒட்டுமொத்த காவல்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே தான் டிஜிபி நெல்லையை உற்றுநோக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், உடல் அடக்கம் செய்யப்படும் வரை போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பணியில் ஈடுபட உள்ளனர்.

இதையும் படிங்க: கையே கருகி போச்சு.. பெண் மருத்துவர் உயிரை பறித்த லேப்டாப் சார்ஜர்.. சென்னையில் சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.