சென்னை: தமிழகத்தில் குளிர் காலம்,மழைக்காலம் முடிவடைந்து தற்போது கோடைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. மார்ச் 1 முதல் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வந்த நிலையில், இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106.16°F வெப்பம் பதிவாகி உள்ளது என தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில்,
- கோவை - 102.56°F
- தர்மபுரி - 104.00°f
- கரூர் பரமத்தியில் - 104.90°F
- மதுரை நகரத்தில் - 101.48°F
- மதுரை விமான நிலையம் - 102.56°F
- நாமக்கல் - 102.20°F
- பாளையங்கோட்டை - 100.04°F
- சேலம் - 104.54°F
- தஞ்சாவூர் - 100.40°F
- திருப்பத்தூர் - 101.84°F
- திருச்சி - 103.10°F
- திருத்தணி - 102.56°F
- வேலூர் - 104.18°F
வெப்பம் பதிவாகி உள்ளது என தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.