சென்னை: தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆயிஷா (40). இவர், தான் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்ததாகவும், இதனைத் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டி அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் பதிவு செய்வதற்காக ஆயிஷா கொண்டு வந்த மருத்துவம் தொடர்பான ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளர் காமராஜ் சான்றிதழைச் சரி பார்த்த போது அவை அனைத்தும் போலியானது எனத் தெரிய வந்தது.
இதையடுத்து பதிவாளர் காமராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரும்பாக்கம் காவல்துறையினர் ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக ஆயிஷாவை கைது செய்தனர். மேலும், போலியான ஆவணங்களைத் தயார் செய்து கொடுத்த நபர்களின் விவரம் குறித்து ஆயிஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோட் செய்வது எப்படி?