ETV Bharat / state

வரதட்சனை கொடுமை.. 8 ஆண்டுகள் தலைமறைவு.. சென்னை ஏர்போர்ட்டில் கைதான தொழிலதிபர்! - businessman arrested in airport - BUSINESSMAN ARRESTED IN AIRPORT

Wanted accused arrested at Chennai airport: வரதட்சனை கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு மேல் மலேசியாவில் தலைமறைவாக இருந்த தெலங்கானா தொழிலதிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கைதான தொழிலதிபர் சந்தீப் குமார்
கைதான தொழிலதிபர் சந்தீப் குமார் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 6:49 PM IST

சென்னை: தெலங்கானா மாநிலம், ராமகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் குமார் (30). இவர் தொழிலதிபர். இந்த நிலையில், சந்தீப் குமார் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ராமகுண்டம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஸ்ரீராம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதை அடுத்து போலீஸ் தேடுவதை அறிந்த சந்தீப் குமார், மலேசிய நாட்டிற்குச் சென்று அங்கு தலைமறைவாகிவிட்டார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக மலேசியாவில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து, தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் காவல் ஆணையர், சந்தீப் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார்.

அதோடு, சந்தீப் குமார் மீது அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசியும் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள்பரிசோதித்தனர். அப்போது 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் சந்தீப் குமார் அந்த விமானத்தில் வந்திருந்தார்.

அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்த போது, இவர் வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய வழக்குகளில் தெலங்கானா மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது.

இதையடுத்து, குடியுரிமை அதிகாரிகள் சந்தீப் குமாரை வெளியில் விடாமல் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு, சென்னை விமான நிலைய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பின்னர், தெலங்கானா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தெலங்கானா மாநில தனிப்படை போலீசார் விமானத்தில் சென்னை வந்து, சந்தீப் குமாரை கைது செய்து தெலங்கானா மாநிலம் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: "போலீஸ் விசாரித்தது உண்மைதான்! ஆனால்..." - நெல்சன் மனைவி அளித்த விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.