ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை... 2 ஆசிரியர்கள் மீது பாய்ந்தது போக்சோ! - Nellai Teachers arrested

நெல்லையில் உள்ள தனியார்ப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு ஆசிரியர்களும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

pocso case representative file image
கோப்புப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 12:05 PM IST

திருநெல்வேலி: நெல்லையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அப்பள்ளியில் பயின்று வரும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் ஓரினச் சேர்க்கை பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தது.

அந்த புகாரின் அடிப்படையில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த ராபர்ட் புரூஸ் என்ற நபர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், நிரந்தர ஆசிரியராகச் செயல்பட்டு வந்த நெல்சன் என்ற நபரையும் பணி இடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வரும் பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. நெல்லையில் மேலும் ஒரு ஆசிரியர் பணிநீக்கம்!

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரிடம் கேட்டபோது, பாலியல் புகார்கள் வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தற்போது காவல்துறையினரும், கல்வித்துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

போக்சோவில் கைது: இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குழுந்தைகள் நலப் பிரிவு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், ஆசிரியர்கள் நெல்சன், ராபர்ட் ஆகிய இருவர் மீதும் போக்சோ (POCSO Act) சட்டப்பிரிவு 11-இன் கீழ் 3 வருடம் தண்டனை கிடைக்கும் வகையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதி உத்தரவின் கீழ் ஆசிரியர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.