ETV Bharat / state

ரயில் பயணிகளுக்கு ரூ.20-க்கு சாப்பாடு - தெற்கு ரயில்வே அசத்தல் ஏற்பாடு! - southern railway - SOUTHERN RAILWAY

Southern Railway: திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 34 ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக ரூ.20 விலையில் தயிர், புளியோதரை, சாம்பார் உள்ளிட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுவது ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Southern Railway
தெற்கு ரயில்வே
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 7:51 AM IST

Updated : Apr 25, 2024, 10:40 AM IST

மதுரை: ரயிலில் 2ஆம் வகுப்பு பொதுப்பெட்டிகளில் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு சுகாதாரமான, சுவையான உணவு வழங்க ரயில்வே சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறைந்த விலையில் உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில், 250 கிராம் அளவுள்ள தயிர் சாதம் அல்லது புளி சாதம் அல்லது சாம்பார் சாதம் அல்லது பருப்பு கிச்சடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ஊறுகாயுடன் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 350 கிராம் அளவுள்ள தயிர் சாதம் அல்லது புளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ரூ.50-க்கு விற்கப்படுகிறது. மேலும், 325 கிராம் பூரி, பஜ்ஜி ஆகியவை ஊறுகாயுடன் ரூ.20-க்கும், 200 மில்லி லிட்டர் குடிநீர் குவளைகள் ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரயில் நிலையங்களில் குறைந்த கால அளவில் நின்று செல்லும் ரயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவைத் தேடி அங்குமிங்கும் செல்லாத வகையில் பொதுப் பெட்டிகளுக்கு அருகிலேயே நடைமேடைகளில் இந்த விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளன.

தற்போது, தெற்கு ரயில்வே அளவில் 34 ரயில் நிலையங்களில் இந்த குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே அளவில் 100 ரயில் நிலையங்களில் 150 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய முறை விற்பனைக்கு பொதுப்பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “இன்று நடைபெற்ற கொலைக்கும் சித்திரைத் திருவிழாவிற்கும் சம்பந்தமில்லை” - மதுரை மாநகர காவல்துறை விளக்கம்! - Madurai City Police

Last Updated : Apr 25, 2024, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.