தஞ்சாவூர்: தீபாவளியைப் பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூரில் 500 டன் குப்பைகள் அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு, நன்றி செலுத்தும் விதமாக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
தீபாவளி பண்டிகையை தஞ்சை மாவட்டம் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். வயது வித்தியாசம் இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெடிகளை வெடித்து மகிழ்ந்தனர். காலை தொடங்கிய பட்டாசு சத்தம் இரவு வரை கேட்டுக் கொண்டே இருந்தது.இதனால் தஞ்சை மாநகர் முழுவதும் 500 டன் பட்டாசு கழிவுகள் சேர்ந்தது. இதனை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் அகற்றி நகரை சுத்தப்படுத்தினர்.
இதையும் படிங்க: கை சின்னத்தில் புறநோயாளிகள் சீட்டு: அரசு மருத்துவமனையின் அவலத்தை சுட்டி காட்டிய காங்கிரஸ் தொண்டர்!
அசைவ விருந்து: பண்டிகை காலங்களிலும் ஓய்வில்லாமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு நல் உதவிகள் செய்து வரும் "ஜோதி அறக்கட்டளை" இந்த முறையும் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அதாவது தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அறக்கட்டளை சார்பாக துப்புரவுப் பணியாளர்களை வேன் மூலம் தஞ்சையில் உள்ள பிரபல உயர்தர அசைவ உணவகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மட்டன் கோலா உருண்டை, பிஷ் பிங்கர், முட்டை, சிக்கன் பிரியாணி, ஐஸ்கிரீம் என தடபுடலான விருந்து பரிமாறப்பட்டது. இதனை மன நிறைவாக உண்டு மகிழ்ந்த தூய்மை பணியாளர்கள் அறக்கட்டளையை சேர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்