ETV Bharat / state

இனிமேல் கட்டடங்களில் சோலர் மூலம் சூரிய மின்சக்தி திறன் அமைப்பது சுலபம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 5:57 PM IST

TANGEDCO: கட்டடங்களில் மேற்கூரையில் 3 கிலோவாட் சூரிய மின்சக்தி திறன் அமைக்க ஒப்புதல் தேவையில்லை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தகவல் அறிவித்துள்ளது.

tangedco-announced-that-approval-is-not-required-for-installing-3-kw-solar-power-capacity-on-roof-of-buildings
இனிமேல் கட்டடங்களில் சோலர் மூலம் சூரிய மின்சக்தி திறன் அமைப்பது சுலபம்! -

சென்னை: தமிழ்நாட்டில் சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க மின் இணைப்பு உள்ள கட்டடங்களின் மேற்கூரையில் 3 கிலோ வாட் வரையிலான 'சூரிய மின் சக்தி திறன்' அமைக்க சத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இன்று (ஜன.23) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான சூரிய மின் உற்பத்தியை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தற்போது, தமிழ்நாட்டில் சூரிய மின்உற்பத்தியின் நிறுவப்பட்ட திறன் 7372 மெகாவாட்டாக உள்ளது. இவற்றில் 526 மெகாவாட் கட்டிட மேல் கூரையில் பொருத்தப்படும் சூரிய மின் உற்பத்திநிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கட்டட மேல் கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்ப செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, தாழ்வழுத்த மின் இணைப்புகளில் மேல் கூரை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் செயலாக்கப்படுகின்றன.

இந்த செயல் முறையை மேலும் விரைவுபடுத்த, 3 கிலோ வாட் வரையிலானசூரிய மின் சக்தி திறன் அல்லது மின் இணைப்பில் அனுமதிக்கப்பட்ட மின் திறன் இரண்டில் எது குறைவோ, அதற்கு சாத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் மின் இணைப்பு உள்ள கட்டடங்களின் மேல் கூரையில் சூரிய மின் நிலையங்கள் நிறுவ விரும்பும் நுகர்வோர் விண்ணப்பத்தை இணையதளம் மூலமாக பதிவு செய்து இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2024 ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தலா? - டெல்லி தேர்தல் ஆணையம் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.