ETV Bharat / state

மின் கம்பம் மாற்றி அமைக்க லஞ்சம் கேட்ட மின் வாரிய அதிகாரி.. கையும் களவுமாக சிக்கியது எப்படி? - TNEB officer arrested for Bribing - TNEB OFFICER ARRESTED FOR BRIBING

TNEB officer arrested for Bribing: திருச்சி கிராப்பட்டியில் மின் கம்பத்தை மாற்றி நடுவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரி
லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரி (Photo credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 7:44 PM IST

Updated : May 28, 2024, 7:54 PM IST

திருச்சி: திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த தங்கையன் என்பவரின் மகன் அந்தோணி (46). இவர் புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து கொடுத்து வருகிறார். அந்த வகையில், திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு ஒப்பந்தம் அடிப்படையில், எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், அவர் பணியாற்றி வரும் அந்த வீட்டிற்கு முன்பு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதாகக் கூறி, அந்த கம்பத்தை சற்று தள்ளி வைப்பதற்கு கிராப்பட்டியில் உள்ள உதவி செயற்பொறியாளர், இயக்கலும் காத்தலும், மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழகம் அலுவலகத்தை அணுகியுள்ளார்.

மேலும், அங்கிருந்த வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் கூறியதன் பேரில், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி உள்ளார். அதன் பின்னர், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர், குறிப்பிட்ட இடத்தினை பார்வையிட்டு எஸ்டிமேட் தயார் செய்து கொடுத்துள்ளார்.

பின்னர், ஆன்லைனில் கட்டணமாக 35 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு அந்தோணியிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி உயர் மின்னழுத்த கம்பத்தை மாற்றி அமைப்பதற்காக 35 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை செலுத்திவிட்டு, அதன் ரசீதினை எடுத்துக் கொண்டு வணிக உதவியாளர் அன்பழகன் என்பவரிடம் அந்தோணி கொடுத்துள்ளார்.

அதற்கு அன்பழகன் ஒரு மாதம் கழித்து தன்னை வந்து பார்க்க வேண்டுமாறு கூறியதை அடுத்து, நேற்று (திங்கட்கிழமை) கிராபட்டியில் உள்ள அலுவலகத்தில் அன்பழகனைச் சந்தித்து மின் கம்பம் மாற்றம் குறித்து அந்தோணி கேட்டுள்ளார். அதற்கு அன்பழகன் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.

தன்னால் அவ்வளவு தொகை தர இயலாது என்று அந்தோணி கூறியதை அடுத்து, அவரிடம் ஐயாயிரம் குறைத்துக் கொண்டு, 15 ஆயிரம் கொடுக்குமாறும் பேரம் பேசியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அந்தோணியிடமிருந்து அன்பழகன், லஞ்சமாக 15 ஆயிரம் ரூபாய் பெற்றபோது கையும் களவுமாக பிடித்தனர். அதனை கிராப்பட்டி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர் வருகிறது.

இதையும் படிங்க: அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது பாய்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கு.. தீவிரமடையும் விசாரணை!

Last Updated : May 28, 2024, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.