ETV Bharat / state

"ஒரு வருஷமா சம்பளம் தரல" மரத்தில் ஏறி யோகா ஆசிரியர் போராட்டம்!

சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி தமிழ்நாடு யோகா ஆசியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நபர்
மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நபர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 7:04 PM IST

சென்னை: அரசு ஆரம்ப சுகாதர நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு கடந்த 1 வருடமாக ஊதியம் வழங்கவில்லை என கூறி சென்னை ராஜரத்தின ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு யோகா ஆசியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போது யோகா பயிற்சியாளர் ஒருவர் மரத்தின் மீது ஏறி கயிற்றைக் கட்டி நூதன முறையில் யோகா பயிற்சி செய்து போராட்டம் நடத்த முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் இதை போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி அவரை, மரத்திலிருந்து கீழே இறக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

யோகா ஆசியர்கள் போராட்டம் (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து யோகா பயிற்சி ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் காசிநாதன் கூறும்போது, "மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் யோகா பயிற்சியாளர்களை அந்தந்த மாநிலங்களில் தற்காலிகமாக கற்று தருவதற்கு நியமித்துள்ளனர்.

இதையும் படிங்க: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனப் பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி!

அதுபோல தமிழகத்திலும் யோகா பயிற்சியாளர்களைசில இடங்களுக்கு மட்டுமே நியமித்துள்ளனர்.பல இடங்களில் யோகா பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் பணி செய்யும் யோகா பயிற்சியாளர்களுக்கு ஓராண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை இதனை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.