சென்னை: இந்த ஆண்டிற்கான ரமலான் மாதம் இன்று முதல் தொடங்குவதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்ட அறிக்கையில், “கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். இன்று 11.03.2024 திங்கள்கிழமை புனிதமிகு ரமலான் பிறை பார்க்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்கள்.
ஆதலால் ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. முஃமின்கள் நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அமலுக்கு வந்தது சிஏஏ சட்டம்.. மத்திய அரசு அறிவிப்பு!