ETV Bharat / state

அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் அமைக்கலாமா? தேர்தல் ஆணையம் கூறுவது என்ன? - Lok sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Election Officer Satya Pratha Sahu: அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 4:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் வாட்டி வைத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். ஆகவே, வெப்பத்தின் பிடியில் இருந்து உடலைக் குளுமையாக வைத்திருக்க உதவும் உணவுகளை மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். மக்களும் இளநீர், பதனீர், நுங்கு, நன்னாரி சர்பத், ஜிகர்தண்டா, மோர், கம்மங்கூழ் போன்றவற்றை அருந்தி, உடலை குளுமையாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்களுக்காக நீர் மோர் பந்தலை அமைத்து, ஆரஞ்சு, தர்பூசணி, முலாம் பழம், திராட்சை உள்ளிட்ட நீர்ச்சத்து பழங்கள், இளநீர், ரோஸ் மில்க், மோர், தண்ணீர் போன்றவற்றையும் வழங்கி வருகின்றனர். தற்போது 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

ஆகவே வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தண்ணீர்பந்தல் (தாகமுள்ள மக்களுக்கு இலவச தண்ணீர் விநியோகம்) திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம், புது டெல்லி, அதன் கடித எண். 464/TN-HP/2024/SS-1/INST, நாள்: 30.04.2024இல், தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் முன்மொழியப்பட்ட முன்மொழிவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

எந்த ஓர் அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் இந்த செயல்பாட்டின் மூலமாக எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக் கூடாது எனவும், தண்ணீர் பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும், ஆணையத்தின் மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களைக் கடைபிடிக்க வேண்டும் எனவும், அவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம்.

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், அவரவருடைய எல்லைக்குள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீர் பந்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பிடிபட்ட இருவரிடம் சிபிசிஐடி 10 மணி நேரம் விசாரணை - CBCID Investigate In 4 Crore Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.