ETV Bharat / state

"மொழி அரசியலை இனியாவது திமுக கைவிட வேண்டும்" - தமிழிசை செளந்தரராஜன்

மொழி அரசியலை இனிமேலாவது திமுக கைவிட வேண்டும்,பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன் (Credits- ETV Bharat Tamil Nadu\)

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விமானத்தில் நான் வந்த ஒரு மணி நேரத்திற்குள் முதல்வர் ஏதாவது டிவிட் போட்டு இருக்கின்றாரா? தமிழுக்கு இவர்கள் மட்டுமே உரிமையானவர்கள் என்பது போல பேசுகின்றனர்.

பா.ஜ.கவினர் தமிழ்ப் பற்று இல்லாதவர்கள் என காட்ட முயல்கின்றனர். இதற்கான வெளிப்பாடுதான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியது. ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா என முதல்வர் பார்த்துக்கொண்டு இருக்கின்றார். தமிழை சொல்லி மக்களை ஏமாற்றினோம்.

தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு (Credits- ETV Bharat Tamil Nadu\)

இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம் இன்னொரு மொழியை சொல்லி தமிழை யாரும் சிறுமைப்படுத்த முடியாது. மொழி அரசியலை இனிமேலாவது திமுக கைவிட வேண்டும். என்னைக் கூட இந்தி இசை என விமர்சிக்கின்றனர். தமிழ் என் உயிரிலும் இருக்கின்றது. திமுகவினரின் எத்தனை பேர் குழந்தைகள் தமிழைப் படிக்கின்றனர். தமிழ்த் தாய் வாரம் கொண்டாடப்பட வேண்டும். தமிழ்தாய் வாழ்த்து விடுபட்டதில் எனக்கு ஒப்புதல் கிடையாது.

உள்நோக்கம் இல்லாத ஒன்றை உள்நோக்கத்துடன் செய்ததாக காட்ட முயல்கின்றனர். தெரியாமல் செய்த தவறை பெரிதாக்குகின்றனர் எதையாவது பூதாகரமாக செய்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். இந்த இரட்டை வேடத்தைக் கண்டிப்பதாக தெரிவித்த அவர் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம், முன்பு இந்தி தினத்தை வாழ்த்திப் பேசி விட்டு இப்போது இந்தியை எதிர்த்துப் பேசுகின்றார்.

இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து; மன்னிப்பு கேட்டும் சர்ச்சையாக்குவதா? திமுகவின் அரசியல் இப்போ எடுபடாது - எல். முருகன்!

மொழி அரசியலை திமுக விட்டொழிக்க வேண்டும். அப்படி பேசி பேசி என்ன செய்து இருக்கின்றனர். தமிழிலில் மாணவர்கள் முழுமையாக பேசுவது இல்லை. பள்ளி கல்வித்துறை அமைச்சர் உருது மொழியில் எழுதுகின்றார். இது மும்மொழியா? நான்கு மொழியா என்பதை அன்பில் மகேஸ் விளக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். அதற்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அந்த மாநிலத்திற்கு ஆளுநராக முடியாது. திமுக தமிழை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பதுதான் என் கருத்து.

ஆளுநர்களுடன், முதலமைச்சர்கள் இணக்கமான சூழ்நிலையினை கொண்டு வர வேண்டும். நேற்றைய விவகாரத்தில் தமிழக ஆளுநரை அழைத்து என்ன பிரச்சினை என முதல்வர் கேட்டு இருந்தால் எளிதாக இந்த பிரச்சினை முடிந்து இருக்கும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு ஏற்றபடியான உடையினை , அதற்கு ஏற்றபடி அணிவதுதான் சரியாக இருக்கும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்," சின்ன பிரச்சினையை பெரிதாக்க முயல்கின்றனர். உதயநிதி தவறுகளைத் திருத்த திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மகிழ்ச்சிதான். கோவையில் தொடர்ந்து வெடி குண்டு புரளி வந்து கொண்டு இருக்கின்றது . இது போன்ற புரளிகளை காவல்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இந்த புரளிகள் சற்று கவலை அளிப்பதாக இருக்கின்றது. காவல் துறை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்
வளரும் குழந்தைகளுக்கு மொழிகளை கிரகித்து கொள்ளும் தன்மை இருக்கின்றது.நெல்லை நீட் பயிற்சி மையத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக நீட் தேர்வை குறைசொல்ல முடியாது நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த வேண்டும் நீட் மையம் செல்லாமலேயே மாணவர்கள் தேர்வாகி இருக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu\)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.