ETV Bharat / state

சாந்தனுக்கு உடல் நலக்குறைவு - உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை - தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 8:07 PM IST

Tamilaga Valvurimai Party Statement: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.

சாந்தன்
சாந்தன்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில், "ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில், தமிழீழத்தை சேர்ந்த சாந்தனும் ஒருவர். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். இவர் தமிழீழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் அளித்த பின் அவர்களை அனுப்புவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்கான எந்த முன் முயற்சியும் தமிழ்நாடு அரசோ, மத்திய அரசோ எடுக்காதது கவலை அளிக்கிறது. கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன். தன்னை சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு இந்திய - இலங்கை - தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 32 வருடங்களாக எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு கூட வாழ விரும்புகிறேன்.

ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன் என அதில் கூறி உள்ளார். மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.

உச்சநீதிமன்றத்தால் கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டும், முருகன், சாந்தன், ராபா்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய தமிழா்களை, திருச்சி சிறப்பு முகாமில் வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மனிதநேய மாண்பிற்கு எதிரானது. முருகன், சாந்தன் உள்ளிட்டோர் விடுதலைக்கு பின்னர், அவர்கள் விரும்பும் நாட்டிற்கோ அல்லது அவர்களின் உறவினர்களிடமோ சேர்ந்து வாழ வேண்டும் என்பதே, ஜனநாயக உணர்வாளர்கள், நீதிமன்றத்தில் வாதடிய வழக்கறிஞர்கள் முழக்கம்.

ஆனால், அதற்கெல்லாம் அரசுகளிடம் எந்த திட்டமும் இல்லாதது கண்டனத்து உரியது. எனவே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு, உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகியோரை விடுவித்து, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் அனுமதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - தொகுதி பங்கீடு பட்டியல் வெளியீடா? காங்கிரஸ் திட்டவட்ட மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.