ETV Bharat / state

"மீதமுள்ள இரண்டாண்டு ஆட்சியில் நிச்சயம் சாதிவாரி கணக்கெடுப்பு"- தவெக தலைவர் வேல்முருகன் நம்பிக்கை! - TVK VELMURUGAN - TVK VELMURUGAN

TVK VELMURUGAN: தமிழகத்தில் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், பாமகவின் தொடர் தோல்வி எதிர்காலத்தில் சமூக நீதி குறித்த கேள்வி உருவாகும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

TVK VELMURUGAN,PMK ANBUMANI RAMADOSS
TVK VELMURUGAN,PMK ANBUMANI RAMADOSS (Credit - ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 6:00 PM IST

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETVBharat TamilNadu)

கோயம்புத்தூர்: கொடிசியாவில் இன்று (ஜூன்.15) நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சமூக நீதி கோட்பாடு அடிப்படையில் துவங்கப்பட்ட இயக்கமான பாமக தொடர்ந்து தோல்விகளை தழுவுவது எதிர்காலத்தில் சமூக நீதி குறித்த கேள்வி உருவாகும் என்றார்.

இடைத்தேர்தல் என்றாலே ஆளுகின்ற அரசியல் கட்சி வெற்றி பெறுவது தமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலம் இருந்து வருகின்ற உண்மை. இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ச்சியாக மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொண்டிருப்பதாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.

நடந்து முடிந்த தேர்தலில் பண பலம், அதிகார பலம் வெற்றி பெற்றிருப்பதாக கூறும் எதிர்கட்சிகளின் கருத்துகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எப்போதுமே தோல்வியை தழுவுகின்றவர்கள் பணபலம், ஆட்பலம் என்று சொல்வார்கள். ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்கள் வாக்களிக்காமல் வெற்றி பெற முடியாது. மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் வெற்றி கிடைத்திருக்கிறது.

தமிழக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் மக்களுக்கான சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு அறிவு சார்ந்த தளத்தில் இந்த அரசு மிகச் சிறப்பாக பணியாற்றி இருப்பதற்காக கிடைத்த அங்கீகாரம் மற்றும் கூட்டணி கட்சியினுடைய தொண்டர்களின் கடினமான உழைப்பும் சேர்ந்து கிடைத்த வெற்றி தான் இந்த மகத்தான வெற்றி.

இதேபோல் திமுகவுடன் இணைந்து மூன்று தேர்தலை சந்திக்கிறோம். தொடர்ந்து இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்களுக்கான பங்கினை கொடுத்து முதலமைச்சர் அழைத்துச் சென்றிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று நம்புகிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாடு முழுவதும் அந்தந்த சமூகங்களுக்கான உண்மையான எண்ணிக்கை அடிப்படையில் சமூக நீதி வழங்கப்பட வேண்டும். கல்வி வேலைவாய்ப்பு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறேன் என்றார்.

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுகிறது. தொழில் வணிக வளம் தமிழர்களிடமிருந்து தட்டிப் பறிக்கப்படுகிறது என வருத்தம் தெரிவித்த அவர், இதில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கு ஏற்றவாறு சமூகநீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சமூக நீதி கோட்பாட்டின் வழியில் வந்த தமிழக முதலமைச்சரும் சமூக நீதி அரசராக நடத்துகின்ற, இந்த அரசு உடனடியாக சமூகநீதி காக்கின்ற வகையில் சாதிவாரி கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் கண்டிப்பாக முதலமைச்சர் இதனை செய்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஆசிரியர்களால் விண்வெளி துறையில் எனக்கு ஈடுபாடு வந்தது" - மாணவர்களுக்கு சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் அட்வைஸ்! - CHANDRAYAAN3 DIRECTOR VEERAMUTHUVEL

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.