சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வந்த இணை இயக்குனர்கள் 9 பேர் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், “தொடக்கக் கல்வித் துறையில் இணை இயக்குனர் நிர்வாகம் பணியில் இருந்த சுகன்யா மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனர் நிர்வாகம் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக பணிபுரிந்து வந்த கோபி தாஸ், தொடக்கக் கல்வித்துறையில் இணை இயக்குனர் நிர்வாகம் பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலக் கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து வந்த ஞானகௌரி, பள்ளி கல்வித்துறையில் இணை இயக்குனர் மேல்நிலைக் கல்வி பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடக்கக் கல்வித்துறையில் இணை இயக்குனர் அரசு உதவி பெறும் பள்ளிகள் பணியிடத்தில் இருந்த ஸ்ரீதேவி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனியார் பள்ளியில் இயக்குநரகத்தில் இணை இயக்குனராக இருந்த சாந்தி, தொடக்கக் கல்வித்துறையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையில் தொழிற்கல்வி இணை இயக்குனராக பணிபுரிந்த ராமகிருஷ்ணன், தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தில் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளர் சீரமைப்பு துறையில் பணிபுரிந்து வந்த ஜெயக்குமார், தொழிற்கல்வி இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணிபுரிந்து வந்த இணை இயக்குனர் முனுசாமி, கள்ளர் சீரமைப்பு துறையில் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணிபுரிந்து வந்த ஆனந்தி, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர்களை பழி வாங்கினால் போராட்டம் வெடிக்கும்” - அறிவுச் சமூகம் அறிக்கை!