ETV Bharat / state

கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணாவுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பொறுப்பு.. தமிழ்நாட்டில் வலுக்கும் எதிர்ப்பு! - jal shakti minister somanna

JAL SHAKTI MINISTER SOMANNA: தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.சோமண்ணா நீர்வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்புகள் எழத் தொடங்கியுள்ளன.

மத்திய இணை அமைச்சர் சோமண்ணா
மத்திய இணை அமைச்சர் சோமண்ணா (Credit - V SOMANNA X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 12:44 PM IST

சென்னை: தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சனை தீராத நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளை கையாளும் நீர்வளத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சராக வி.சோமன்னா நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராக நரேந்திர மோடிக்கும், அதைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மோடி அமைச்சரவையில் நரேந்திர மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனையடுத்து நேற்று, அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் கர்நாடக மாநிலத்தை சேந்த பாஜக எம்.பி. சோமண்ணா நீர்வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து உரிய நீரை வழங்க மறுத்து வரும் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணையும் கட்ட முயற்சித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் விவசாயமே கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் பட்டியலில் கர்நாடக மாநிலத்தை சேந்த பாஜக எம்.பி. சோமண்ணாவை நியமித்து இருப்பதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "கர்நாடகாவைச் சேர்ந்த சோமண்ணா ஜல்சக்தி துறைக்கு அமைச்சர். மர நிழலில் மரம் வளராது என்பதைப் போல தமிழ்நாட்டுக்கு அவரால் எப்படி நியாயம் கிடைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் தெரிவித்துள்ளதாவது," தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி பிரச்னை இன்னும் தீராத நிலையில் அந்தப் பிரச்னையைக் கையாளும் ஜல்சக்தி துறைக்கு கர்நாடகாவின் சோமன்னாவை அமைச்சராக நியமித்திருப்பது மரபும் அல்ல, நியாயமும் அல்ல!

முழுமையான அதிகாரம் இல்லாத இணையமைச்சர் பதவிதான் என்றாலும் காவிரி நதிநீர் ஆணையத்தின் செயல்பாடுகளில் குறைந்தபட்ச ஆதிக்கத்தை அவர் செலுத்த வாய்ப்புள்ளதால் உடனடியாக அவரது இலாகாவை மாற்றுவதே நேர்மையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

யார் இந்த வி.சோமன்னா: கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியுற்ற வி.சோமன்னா, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகம் மாநிலம் தும்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பி.முத்தஹனுமே கவுடா விட 1 லட்சத்து 75 ஆயிரத்து 594 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்போது மோடி அமைச்சரவையில் இனை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இதையும் படிங்க: நரேந்திர மோடி 3.0: மத்திய அமைச்சர்களின் இலாகா பட்டியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.