விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது. மாநாட்டில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் உள்ளிட்ட 21 கேள்விகள் காவல் துறை சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திடம் கேட்கப்பட்டு இருந்தது.
போலீசாரின் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலளிக்கப்பட்ட நிலையில், மாநாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு தொடர்பாக சற்று நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
செப்.23ல் தவெக மாநாடு! - காவல் துறை அனுமதி!#etvbharat #etvbharattamil #tvk #vijay #TVKParty #tvkthalaivarvijay @actorvijay @tvkvijayhq pic.twitter.com/JHkbciFItL
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 8, 2024
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி மாநாட்டுக்காக மொத்தம் 150 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ள நிலையில், அதுகுறித்து கட்சியின் சார்பில் காவல் துறையிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுவீட்டில் பால் காய்ச்சி குடிபுகுந்த பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை.. முதலமைச்சர், ஈடிவி பாரத்துக்கு நன்றி! - Padma shri Chinnapillai new house