ETV Bharat / state

பஜ்ஜி சுட்டும்... மீன் விற்றும்... நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Campaign: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்து வரும் வேளையில், இன்று (ஏப்.7) பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மேற்கொண்ட வாக்கு சேகரிப்பின் ஒரு கண்ணோட்டம்.

Lok Sabha Election Campaign
Lok Sabha Election Campaign
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 4:53 PM IST

Updated : Apr 7, 2024, 5:39 PM IST

பஜ்ஜி சுட்டும்... மீன் விற்றும்... நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள்!

தமிழ்நாடு: நாம் தமிழர் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கலாமணி, அந்த கட்சியின் நிர்வாகிகளுடன் சென்று திருப்பூர் மாவட்டம் மங்கலம், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மைக் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது சுல்தான் பேட்டையில் டிரம்ஸ் வாசித்தும், கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து நடனம் ஆடியும் வாக்கு சேகரித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று வேட்பாளர் கலாமணி உடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி வாக்கு சேகரித்தனர்.

மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பு: தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாத்தூர், நல்லிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். மாத்தூர் காளியம்மன் கோயிலில் வழிபட்ட வேட்பாளர் சிவநேசனுக்குக் கோயிலில் பூர்ண கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டி வரவேற்றனர்.

பின் வேட்பாளர் சிவனேசன் தன் உடன் வந்த கட்சி நிர்வாகிகளுக்கு இளநீர் வெட்டி கொடுத்தார். பின்னர் மாத்தூர் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரித்து வந்தார். அப்போது மாடு மிரள வண்டியிலிருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரிப்பு: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு கும்பகோணம் அருகேயுள்ள திரு வலஞ்சுழி பகுதியில் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அங்குள்ள கணேஷ் பவன் என்ற ஹோட்டலில், பஜ்ஜி சுடும் தொழிலாளருக்கு உதவிடும் வகையில், வேட்பாளர் பஜ்ஜி சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நடனமாடி வாக்கு சேகரிப்பு: கோயம்புத்தூர் வடவள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளான எம்ஜிஆர் நகர், கருப்ப ராயன் கோயில் வீதி, பி.என்.புதூர் பேருந்து நிறுத்தம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடன இயக்குநர் கலா மாஸ்டர் கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

அப்போது அண்ணாமலையை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மக்களிடம் கேட்டுக் கொண்டார். பின்னர் பொதுமக்களுடன் இணைந்து ஜமாப் இசைக்கு நடனமாடி வாக்குகள் சேகரித்தார்.

மீன் விற்று வாக்கு சேகரிப்பு: தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி, தருமபுரி பகுதியில் உள்ள ஒட்டப்பட்டி, நேரு நகர், கக்கன்ஜிபுரம், தடங்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்பொழுது கக்கன்ஜிபுரத்தில் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடி வாக்கு சேகரித்தார். மேலும் ஒட்டப்பட்டி பகுதியில் உள்ள மீன் கடையில் மீன் விற்பனையாளருக்கு உதவியாக, மீன் விற்பனை செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதையும் படிங்க: திருமுல்லைவாயல் காவல் நிலையம் முன்பு தாய் தற்கொலைக்கு முயற்சி.. காரணம் என்ன? - Suicide Attempt At Thirumullaivoyal

Last Updated : Apr 7, 2024, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.