சென்னை: தமிழ்நாடு அரசின் மக்கள் செய்தி தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசின் அசத்தலான 5 திட்டங்களான நான் முதல்வன் திட்டம், விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்று குறித்து வீடியோ ரீல்ஸ்-ஐ tndiprmediahub@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

வீடியோ ரீல்ஸ்கள் ஒரு நிமிடம் மட்டுமே இருக்க வேண்டும். அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆக 15. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 3 ரீல்ஸ்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டி சான்றிதழ்களை வழங்குவார். ரீல்ஸ்கள் தமிழ்நாடு அரசின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "காலேஜ் செகண்ட் இயர்லயே கல்யாணமாய்டுச்சு" ஆனாலும் லண்டன் ரிட்டர்ன் - நான் முதல்வன் சக்சஸ் ஸ்டோரி - Naan Mudhalvan Scheme