ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு ஏப்.13 முதல் கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Tamil Nadu schools summer holiday

TN schools summer holiday: தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், 1 முதல் 9 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஏப்ரல் 13ம் தேதி துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 to 9th std summer vacation holiday
1 to 9th std summer vacation holiday
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 12:14 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் பொதுத் தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு 22ம் தேதி தேர்வு முடிவடைகிறது. 11ம் வகுப்பிற்கு மார்ச் 4ம் தேதி முதல் நடைபெற்று வரும் தேர்வு 25ம் தேதி முடிவடைகிறது. அதனைத் தொடரந்து 10ம் வகுப்பிற்கு மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உட்பட 40 தொகுதிகளில் அடுத்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலின் போது வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைக்கப்படுவதுடன், ஆசிரியர்கள் வாக்குச்சாவடியில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கான பயிற்சியும் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்படும்.

இந்த நிலையில் 1 முதல் 9 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துவது குறித்த பள்ளிகல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் ,தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும்.

ஏப்ரல் 13ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்கள் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 26 வரையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏப்ரல் 26 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்" என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நீட் தேர்வு ரத்து உறுதி" - கனிமொழி எம்பி! - Kanimozhi Mp Press Meet

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.