ETV Bharat / state

ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்து; முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு! - Independence Day Tea Party

Independence Day Tea Party: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி
தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 10:20 PM IST

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த அழைப்பை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தனர். அதனால் இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்படி, ஆளுநர் மாளிகைக்கு வந்த தமிழக முதலமைச்சர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சால்வை அணிவித்து புத்தகத்தை பரிசளித்தார். இதனைத் தொடர்ந்து, விழா திடலுக்கு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஒன்றாக வந்தனர். பின், ஆளுநர் தேநீர் விருந்துக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வாழ்த்தினார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி
முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த நிகழ்வில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் எச்.ராஜா, பாமக சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி, தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆளுநர் தேநீர் விருந்தின் போது, பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்திருந்த அமைச்சர்களுக்கு வணக்கம் தெரிவித்து தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் செல்லும் போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அண்ணாமலையைப் பின் தொடர்ந்து சென்று, அவரிடம் பேசியது அங்கிருந்த அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

மேலும், வருகிற 18ஆம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்திற்கு வர உள்ள நிலையில், அது குறித்து அண்ணாமலையிடம் அமைச்சர் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தேநீர் விருந்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறை கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டிய நிலையில், முதலமைச்சர் உட்பட அனைவரும் ரசித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சனாதன வழக்கு; உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.