ETV Bharat / state

"10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளனர்" - ஆளுநர் ஆர்.என்.ரவி! - trichy

governor rn ravi: கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளதாக திருச்சியில் நடைபெற்ற தனியார் பள்ளியின் வெள்ளி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

governor rn ravi
governor rn ravi
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 10:08 PM IST

தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பேச்சு

திருச்சி: திருச்சி அருகேயுள்ள திருவானைக்காவல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியின் வெள்ளி விழா இன்று (பிப்.10) நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக,கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, "திருவானைக்காவலில் உள்ள ஆண்டவன் கல்லூரி 25ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் இந்திய நாடு 75வது சுதந்திர விழாவைக் கொண்டாடி வருகிறது. பாரதம் என்பது ஏதோ சாதாரணமான ஒன்று அல்ல, உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் உதாரணமாகத் திகழ்ந்து வருவதே நம் பாரதம்.

10 ஆண்டுகளுக்கு முன் இந்தியா என்பது மக்கள் தொகையில் மட்டுமே நிறைந்த நாடாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது. அதாவது உலகளாவிய பிரச்சினைகளுக்கு நம் பாரத நாடு தீர்வை கொடுக்குமா? என்று பல நாடுகள் எதிர்பார்க்கக் கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.

அதே போல் கண்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து நமது பாரத நாடு ஜி20 மாநாட்டைச் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளது. அதுவே நம் பாரதிய சனாதனத்தின் மதிப்பாகும். தட்பவெப்ப சூழல் மாற்றங்கள் உலகிற்கு பெரிய சவாலைக் கொடுத்து வரும் நிலையில் இதனை ஒரு பெரிய விஷயமாக பலர் கருதுவதில்லை.

ஆனால் நமது பாரத நாடு அப்படி அல்ல, தற்போது இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கும் எரிபொருளின் பயன்பாட்டைக் குறைத்து இயற்கை முறையில் (கிரீன் எனர்ஜி) நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டமிடலை உருவாக்கி வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் நமது தேவைகளை 50% பூர்த்தி செய்ய இயற்கை எரி சக்தியை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலிருந்த வறுமை, கல்வி, படிப்பறிவு இல்லாமை, மருத்துவ கட்டமைப்பு போன்ற அனைத்தும் தற்போது எந்த அளவிற்கு மாற்றம் பெற்றுள்ளது என்பதனை பாருங்கள். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டுள்ளனர்.

ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஆயுஷ்மான் பாரத் வாயிலாக மருத்தும் கிடைக்கின்றது. சூரிய சக்தியின் வாயிலாக மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016ஆம் ஆண்டு தலைநகரில் கொண்டு வந்தார். அப்போது அதன் அருமை யாருக்கும் புரியவில்லை. பல்வேறு நாடுகள் இந்த திட்டத்தை முழுமையாக நம்பவில்லை.

ஆனால் 2020ஆம் ஆண்டு பிரதமர் கொண்டு வந்திருந்த சர்வதேச சூரிய சக்தி நிறுவனம் தற்போது 120 நாடுகளுக்கு சென்று இருக்கிறது. 2016ஆம் ஆண்டு சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி 2 ஜிகா வாட்டாக இருந்தது, ஆனால் தற்போது 70 ஜிகா வாட்டாக மாறி உள்ளது" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

இதையும் படிங்க: மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் மீதான விவாதம்; திமுக எம்பிக்கள் அமளி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.