சென்னை: 2024 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டபேரைவை கூட்டம் இன்று காலை கூடியது, இதில் தமிழக அரசின் உறையை ஆளுநர் புறக்கணித்து இருப்பதும் அதற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை(பிப்.12) துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு வந்தடைந்தார்.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்கியது. இதற்குப் பிறகு ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, ”சட்டப்பேரவை துவங்கும் முன்பாகவும் முடியும்போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு போதிய மரியாதை தரப்படவில்லையென்று குறிப்பிட்டார்.
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இந்நிலையில், தமிழக சட்டப்ரேவையில் பேசிய வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வளைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ராஜினாமா! என்ன காரணம்?