சென்னை: காந்தியின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் காந்தி மண்டபத்தில் நடைபெற்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார். அதன்பின் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர், "காந்திமண்டபம் உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. ஆங்காங்கே குப்பைகளும், மதுபாட்டில்களையும் பார்த்து வேதனையடைந்தேன்.
ஆளுநர் ரவி அவர்கள், காந்தி மண்டபத்தில் நடந்த காந்தி ஜெயந்தி நிகழ்வின் போது, தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் தூய்மை மற்றும் கடைசி ஆண் மற்றும் பெண் மீது அக்கறை கொண்ட மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத கொள்கைகளை வலியுறுத்தினார். ஒரு நிலையான மற்றும் அமைதியான உலகை வளர்ப்பதற்கு… pic.twitter.com/9OaFpLb4Xk
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 2, 2024
நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனாலும், தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடு நீங்கவில்லை. தமிழ்நாட்டில் சமூகநீதி பேசுகிறார்களே தவிர நடைமுறையில் இல்லை. நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும், தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் NCRB புள்ளிவிவரங்களின்படி தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்தில் 60 பேர் தலித் மக்கள் தான். தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்படுகிறது. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து வெட்கப்படுகிறேன். தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் உரிய நீதி கிடைப்பதில்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க : காமராஜர் அளித்த வாக்குறுதி.. 60வது ஆண்டில் தருமபுரி!
அதேபோல், தமிழ்நாடு அரசு சார்பில் இன்று எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருப் படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, காந்தியின் புகழை பாடும் விதமாக பள்ளி மாணவர்கள் பாடிய கீர்த்தனைகளையும் முதலமைச்சர் கேட்டு ரசித்தார்.
உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 156 - வது பிறந்தநாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்த முதல்வர்!#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@Udhaystalin @mp_saminathan @RRajakannappan @Subramanian_ma @PKSekarbabu pic.twitter.com/0r7I7Tg63t
— TN DIPR (@TNDIPRNEWS) October 2, 2024
இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பால்வளம் மற்றும் காதித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், த.வேலு, ஜோசப் சாமுவேல், பிரபாகரராஜா, துணை மேயர் மகேஷ் குமார், தலைமைச்செயலாளர் முருகானந்தம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்