ETV Bharat / state

பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.. விண்ணப்பம் நிறைவு! - ENGINEERING ADMISSION 2024 - ENGINEERING ADMISSION 2024

TNEA 2024: பொறியியல் படிப்பில் சேர 2.48 லட்சம் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 12 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்  புகைப்படம்
அண்ணா பல்கலைக்கழகம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 10:56 PM IST

சென்னை: 2023ஆம் ஆண்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 175 மாணவர்கள் பதிவு செய்ததில், ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847 மாணவர்கள் கட்டணம் செலுத்தினர். அவர்களில் தகுதியான ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 மாணவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டனர். 2022ஆம் ஆண்டில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 115 மாணவர்கள் பதிவு செய்ததில், 1 லட்சத்து 67ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி கலந்தாய்வில் பங்கேற்றனர்.

சென்ற வருடம் (2023-24) கலந்தாய்வில், 474 கல்லூரிகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 196 இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது. அதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 887 மாணவர்கள் சேர்ந்தனர். அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களுக்கான மொத்த இடங்கள் 12 ஆயிரத்து 136 ஆகும். அதில், 9 ஆயிரத்து 960 மாணவர்கள் சேர்ந்தனர்.

2024ஆம் ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 848 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 439 மாணவர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 76 ஆயிரத்து 145 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். பொறியியல் படிப்பில் சேர்வதற்கு கட்டணம் செலுத்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை 12ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.

இவர்களில் கட்டணங்களைச் செலுத்திய மாணவர்கள் சான்றிதழ்கள் ஜூன் 13ஆம் தேதி முதல் 30 வரையில் சரிபார்க்கும் பணிகள் தமிழ்நாடு பொறியியல் உதவி மையங்களில் நடைபெறுகிறது. மாணவர்களுக்கான ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் ஜூன் 12ஆம் தேதி வெளியிடப்படுகிறது. ஜூலை 10 அன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு துவங்கிய பின்னர், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. விளையாட்டுப் பிரிவிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. அதன்பிறகு, விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இணைய வழியில் நடத்தப்படும்.

இணையதளம்: பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரையில் www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டன. மேலும், மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தவற்கு உதவிடும் வகையில், 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு சென்றும் மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர்.

இதையும் படிங்க: “மாநிலத் தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது” - அண்ணாமலை திட்டவட்டம்! - BJP Annamalai

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.