ETV Bharat / state

"அக்னிபாத் போல் மாறிய தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் நிலை" - ராஜேந்திரன் பகீர் தகவல்! - TNEB Employees work - TNEB EMPLOYEES WORK

TNEB Employees work: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தைப் போன்று கான்ட்ராக்ட் முறையில் பணியாளர்களை மின்சார வாரியம் தேர்வு செய்கின்றது என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் குற்றச்சட்டியுள்ளார்.

மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன்
மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 9:09 PM IST

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றின் மூலமாக தமிழகத்தில் மின்சார இணைப்பு வழங்கப்படுகிறது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் மின்சாரம் துணை மின் நிலையங்களில் சேமித்து வைக்கப்பட்டு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த துணை மின் நிலையங்களில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறியாளர் பணியிடங்ளின் எண்ணிக்கை குறைத்துள்ளது. மேலும், இங்கு ஹவுஸ் ஒர்க்கிங் முறையில் ஓய்வு பெற்ற பணியாளர்களை நியமனம் செய்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது, “ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், 2020 ஆம் ஆண்டு 4 துணை மின் நிலைகள், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அப்பொழுது, அனைத்து தொழிற்சங்களும் போராடி அந்த ஒப்பந்தங்களை திரும்ப பெற வைத்தோம்.

கூடுதல் பணி: இதனையடுத்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்னர், ஒன்றிய அரசின் கொள்கை அடிப்படையில் போக்குவரத்து மற்றும் மின் துறையிலும் ஒப்பந்தம் (contract) முறையை ஊக்குவித்து வருகின்றனர். மின்சார வாரியத்தில் தற்பொழுது வேலைப்பளு அதிகரித்துள்ளது. காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பணியாளர்களுக்கு கூடுதல் பணியுடன் வேலை செய்ய வேண்டிய நிலைவந்துள்ளது.

துணை மின் நிலையங்களில், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை நியமனம் செய்து பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். திமுக அரசு தொழிலாளர் நலன் காக்கும் அரசாக இருக்கும் என கருதி தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், திமுக அரசு ஆட்குறைப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மறைமுகமாக அவுட்சோர்சிங்(Outsourcing) முறைக்கு செல்வதற்கான நடவடிக்கையாக இருக்கிறது.

இது குறித்து மின்துறை அமைச்சர் மற்றும் மின்வாரியத்திலும் தெரிவித்துள்ளோம். தமிழகத்தில் தற்போது அடிமட்ட நிலையில் 23 ஆயிரம் களப்பணியாளர் பதவிகளும், 8 ஆயிரம் வயர் மேன் பதவிகளும் காலியாக உள்ளன. அதேபோல் துணை மின் நிலையங்களை இயக்கவும், பராமரிக்கவும் படித்த இளைஞர்களின் காலிப் பணியிடங்களும் அதிகரித்து வருகின்றனர். காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் வேலைபளுவுடன் பணி செய்து வருகிறோம்.

ஒப்பந்ததாரர்கள் பணி அமர்த்தல்: திமுக ஆட்சி அமைந்த பிறகு, 80 க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் பராமரிப்பதற்கு தனியாருக்கு டெண்டர் விடுத்துள்ளனர். பல கோடி மதிப்புள்ள துணை மின் நிலையங்களை பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும். ஏற்கனவே மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடும் போது எந்தவித பாதிப்பும் ஏற்படாது. புதிதாக படித்து விட்டு வருபவர்களை ஒப்பந்ததாரர்கள் பணியில் அமர்த்தினால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

பயிற்சி: மின் கம்பிகள் பராமரிப்பு பணியின் பொழுது, துணை மின் நிலையத்தில் உள்ளவர்கள் சரியாக மின்சாரத்தை நிறுத்தவில்லை என்றால் அங்கு பணியில் உள்ள மின் ஊழியருக்கு உயிரிழப்பு ஏற்படவோ, மின்வாரியத்தின் சொத்து சேதமடைவோ வாய்ப்புள்ளது. என்வே, புதிதாக எடுப்பவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து பணியில் நியமிக்க வேண்டும்.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணியை, உதவி பொறியாளர் தகுதிக்கு குறையாதவர்கள் பார்க்க வேண்டும் என விதிகள் உள்ளது. அவரின் கீழ் நான்கு இளநிலை பொறியாளர்கள் பணியில் இருப்பார்கள். ஆனால், தற்பொழுது தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் 33 kV முதல் 765 kV வரை துணை மின் நிலையங்களை பராமரிக்கிறது.

முன்னதாக, 2020 ஆம் ஆண்டு பணி மறு சீரமைப்பிற்கு போடப்பட்ட குழுவில், அனுபவம் இல்லாத ஒருவரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், துணை மின் நிலையங்களை மேற்பார்வையிட நான்கு துணை மின் நிலையங்களுக்கு, ஒரு செயற் பொறியாளர் என நிர்ணயத்துள்ளனர். மின்சார வாரியத்தின் விதிகளை மதிக்காமல் அதிகாரிகளின் பணியிடங்களை குறைத்துள்ளனர்.

மின்சார வாரியத்தில் பணிபுரியும் பொறியாளர்களின் பணி என்பது மக்களுக்கு சேவை செய்யும் பணியாக உள்ளது. எனவே, செயற்பொறியாளர் பணியில் உள்ளவர்கள் இருந்தால் மட்டும் உடனடியாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். தற்போது ஆற்றலை குறைப்பதற்கு பதில் மின்சார வாரியத்தின் சொத்துக்களை சேதப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

திமுக ஆட்சி: திமுக ஆட்சியில், மின்சாரத் துறையில் மூன்று ஆண்டு முடிந்த நான்காவது ஆண்டு கொண்டாடப்படும் வேளையிலும், ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மின்சாரத் துறையில் உள்ள 10 ஆயிரத்து 800 காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வந்தன. கடந்த ஆட்சியில் இதனை நிரப்புவதற்கு ஒப்புக்கொண்டு பணியிடங்களை தேர்வு செய்த நிலையில், மீதமுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு கவனம் செலுத்தாத நிலைதான் திமுக ஆட்சியில் உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் படித்த இளைஞர்களை திரட்டி போராட வேண்டிய நிலை ஏற்படும்.

திமுக ஆட்சி அமைந்த பின்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகத்தில் நிரந்தர பணியாளர்களாக ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டியவர்களின் கோப்புகளும், பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது

அக்னிபாத் திட்டம்: மேலும், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தில் ஆட்களை தேர்வு செய்வது போன்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திலும் பணியாளர்களை ஹவுஸ் ஒர்க்கிங் (House Working) முறையில் தேர்வு செய்கின்றனர் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் குற்றச் சாட்டியுள்ளார்.

நிவாரணம்: கேங் மேன்கள் 9 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அவர்களில் மூன்று ஆண்டில் 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கேங்மேன் பணியில் உள்ளவர்கள் பணி சுமையின் காரணமாக, கவனக்குறைவால் மின்சாரம் தாக்கி இருக்கக்கூடிய நிலை உள்ளது. அரசு ஊழியர்கள் இறந்தால் 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக நிவாரணம் உயர்த்தி வழங்கப்படுகிறது.

மின்சார வாரியத்தில் பணியாளர்கள் இறந்தால் இழப்பீடாக, ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மின்சார துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால்,அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இது போன்ற செயல்கள் போராடுவதற்கான உந்து சக்தியாக அமைகிறது.

திமுக ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுத்து விட்டோம் என்று கூறுகின்றனர். ஆனால், 23 ஆயிரம் களப்பணியாளர்களும், 8 ஆயிரம் வயர் மேன் பணியிடங்களும், 4 ஆயிரம் லைன் மேன் பணியிடங்களும் காலியாக உள்ளது. வேலைப்பளுவின் காரணமாக நுகர்வோர்களுக்கு தடை இன்றி மின்சாரம் வழங்க முடியவில்லை.

மின்சார வாரியம் மின்கம்பங்களை உற்பத்தி செய்தது, தற்பொழுது தனியாரிடம் அதனை தயாரித்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அந்த கம்பங்களில் ஏறுவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுத்தினால் லாப நோக்குடன் இயங்க முடியும்.

இது சேவை துறை, இதில் லாபம் நஷ்ட கணக்கு பார்க்க முடியாது. மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்குவதால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, மின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். 2025-26 ஆம் ஆண்டில் பத்தாயிரம் பணியாளர்கள் ஓய்வு பெற உள்ளனர். எனவே, காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்களை எடுத்தால் அவர்களுக்கு பணியை கற்றுக் கொடுத்து பணியில் அமர்த்த வேண்டும்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் கோர விபத்து: பைகா பழங்குடியின பெண்கள் 17 பேர் பலி! - Kawardha Accident Update

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.