ETV Bharat / state

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறது? - Story behind CM Stalin gift box - STORY BEHIND CM STALIN GIFT BOX

Story behind CM Stalin gift box: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் சந்திக்கும் அல்லது அவரைச் சந்திக்க வரும் விருந்தினருக்கு கட்டாயமாக ஒரு பரிசுப்பெட்டகம் வழங்குவதை பார்த்திருப்போம், அந்த பரிசுப்பெட்டகத்தில் இருக்கும் ரகசியக் கதையும், பொருட்களின் மதிப்பையும் பற்றி கூறுகிறது இந்த செய்தி.

பரிசுப்பெட்டகம்
பரிசுப்பெட்டகம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 10:49 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவிற்குச் சென்றார். இந்த பயணமானது 17 நாட்கள் இருக்கும் நிலையில், முதல்வர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்.

அனைவரின் கவனத்தை ஈர்த்த முதல்வர் பயணத்தில், நாம் கடந்து சென்ற பகுதி பரிசு வழங்குதல் எனக் கூறலாம். முதலமைச்சர் ஸ்டாலின், தான் சந்திக்கும் அனைத்து விருந்தினருக்கும் ஒரு பரிசுப் பெட்டகத்தை தமிழகத்தில் வழங்கி பார்த்திருப்போம். ஆனால், நேற்று அவர் அந்த பரிசுப்பெட்டகத்தை அமெரிக்க முதலீட்டார்களிடம் கொடுத்து, அந்த பரிசுப்பெட்டகத்தில் என்னதான் உள்ளது என அனைவரின் ஆர்வத்தையும் தூண்ட வைத்துவிட்டது எனலாம்.

பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம்
பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம் (Credits- ETV Bharat Tamil Nadu)

இவ்வாறு முதல்வர் அனைவருக்கும் பரிசாக வழங்கும் பெட்டகத்தில் என்னதான் இருக்கிறது? என்பதை இந்த தொகுப்பில் காணலாம். அமெரிக்க முதலீட்டாளர்கள் முதல் தமிழக விருந்தினர்கள் வரை முதலமைச்சர் பரிசளிப்பது “தடம்”. இந்த தடம் என்பது தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களை ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த பொருட்களை நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சியின் கீழ் இந்த செயல்பாடு நடந்து வருகிறது.

கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு
கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு (Credits- ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாட்டின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில், பாரம்பரியமிக்க கைவினைப் பொருள்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சமகாலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறைசாற்றுவதற்காவும் இந்த பொருட்களை முதல்வர் தான் சந்திக்கும் விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிறார்.

தடம் பரிசுப்பெட்டகம்
தடம் பரிசுப்பெட்டகம் (Credits- ETV Bharat Tamil Nadu)

பவானியின் ஜமுக்காளம், நெசவாளர்கள் முதல் கள்ளக்குறிச்சியின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள், நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் என அனைத்து சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளதை போற்றும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த திட்டம் கைவினைக் கலைஞர்களை பன்னாட்டு சந்தைகளுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகளவில் கொண்டு செல்ல உதவுகிறது.

திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை
திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை (Credits- ETV Bharat Tamil Nadu)

பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் :

  • திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை
  • விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை)
  • நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால்
  • பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம்
  • புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட்
  • கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 2 கால்களை இழந்த நிலையிலும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தயார்.. யார் இந்த சேத்தன் கொராடா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.