ETV Bharat / state

பாஜகவின் பொய்களை உடைத்தெறிய ஏராளமான திருச்சி சிவாக்கள் தேவை: புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் - DMK MP TRICHY SIVA BOOKS

எதிர்க்கட்சிகள் திமுகவை குடும்பக் கட்சி என்று சொல்லும்போது எனக்கு கோபம் வருவது இல்லை என்றும், பாஜக பரப்பும் பொய்களையும், அவதூறுகளையும் உடைத்தெறிய ஏராளமான திருச்சி சிவாக்கள் தேவை என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

புத்தக வெளியீட்டு விழாவில், முதல்வர், சிவா, டி.ஆர்.பாலு
புத்தக வெளியீட்டு விழாவில், முதல்வர், சிவா, டி.ஆர்.பாலு (Credits - mk stalin x page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2024, 10:59 PM IST

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எழுதிய முரசொலியின் மடியில் தவழ்ந்தவை, மேடையெனும் வசீகரம், கேளுங்கள் சொல்கிறேன், எதிர்பாராத திருப்பம், காட்சியும் கருத்தும், ஆகிய நூல்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது விழா மேடையில் பேசிய முதலமைச்சர், "எண்பதுகளின் தொடக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக இளைஞரணியைத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கியபோது, 5 பேரை முதலில் அமைப்பாளர்களாக நியமித்தார்.

நான் முதலாவது, இரண்டாவது திருச்சி சிவா. மிசா என்.சிவா என்ற பெயரை 'திருச்சி சிவா' என்று மாற்றியவர் கருணாநிதி. அப்போது நாங்கள் முப்பதுகளை தொட்ட இளைஞர்களாக இருந்தோம். இன்று எழுபதுகளைத் தொட்டும் தொய்வில்லாமல் பணியைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இளைஞர்களாக இருக்கிறோம்.

எங்களை என்றும் இளமையாக இயக்குவது, நம்முடைய கட்சி. கறுப்பு சிவப்பு கொடி, தலைவர் கருணாநிதி, இந்த மூன்றும் இல்லையென்றால் நாங்கள் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது. கருணாநிதி அவர்கள் இன்று இருந்திருந்தால் வெளியிடப்பட்டிருக்கக் கூடிய 5 புத்தகங்களுக்காக நம் சிவா அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்.

தலைவர் கருணாநிதிக்கு, எப்போதும் சிவா அவர்களின் பேச்சு என்றால் மிகவும் பிடிக்கும். மாநிலங்களவை பேச்சுகளுக்காக அடிக்கடி பாராட்டுவார். இப்படி சிறப்பான பாராட்டுகளைப் பெற்ற திருச்சி சிவா எழுதியிருக்கும் நூல்களின் தலைப்பே சிவா அவர்களைப் பற்றி சொல்லும்.

  • எதிர்பாராத திருப்பம் - சிவாவின் சிறையைச் சொல்கிறது.
  • மேடையெனும் வசீகரம் - சிவாவின் மேடையைக் காட்டுகிறது.
  • கேளுங்கள் சொல்கிறேன் – அவரின் வாதமாக இருக்கிறது.
  • முரசொலியின் மடியில் தவழ்ந்தவை – அவரின் எழுத்தோவியமாக இருக்கிறது.
  • காட்சியும் கருத்தும் – கலை, இலக்கியமாக இருக்கிறது.

அந்த வகையில், மேடை, எழுத்து, சிறை, வாதம், கலை, இலக்கியம் என்ற சிவா அவர்களின் ஐந்து முகங்களையும் வெளியிடும் மேடை இது. சிவா தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது, அரசியல்வாதிக்குள் இருக்கும் இலக்கியவாதி என்று சொல்லுவார். அதற்கு ஏற்றாற்போல், இவை அரசியல் புத்தகங்களாக மட்டுமல்ல, அரசியலுக்கு வெளியில் இருப்பவர்களும் படிக்கும் இலக்கிய நூல்களாகவும் அமைந்திருக்கிறது.

நம் திருச்சி சிவா அவர்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இளைஞரணியைத் தொடங்கிய காலத்தில் ஐவரில் ஒருவர். அதன்பிறகு 10 ஆண்டுகாலம் இளைஞரணியின் துணைச் செயலாளர். 15 ஆண்டுகாலம் மாநில மாணவரணிச் செயலாளர். இப்போது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் என்று கட்சிப் பணியில் தன்னுடைய உழைப்பால் உயரங்களை அடைந்தவர்.

மக்கள் பணி : புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி மூலமாக மக்களவைக்கு ஒருமுறையும், இப்போது நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமல்ல, திமுகவின் முகமாக மாநிலங்களவைக் குழுத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத்தைப் பொருத்தவரை, 526 விவாதங்களில் பங்கேற்று 790 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதனால்தான் ஆளும் தரப்பு, சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது என்று அச்சம் கொள்கிறது.

அது மட்டுமல்ல, தொழில் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக ஏழு அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறார். ஒன்பது தனி நபர் மசோதாக்களையும், இரண்டு தனி நபர் தீர்மானங்களையும் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய சாதனைகளுக்கு மகுடம் வைப்பதுதான் திருநங்கைகள் உரிமைகள் மசோதா - 2014.
45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனி நபர் மசோதா நிறைவேற்றப்பட்டது மாபெரும் சாதனை. இன்றைக்கு யுபிஎஸ்சி தேர்வுகளில் இது ஒரு கேள்வியாகக் கேட்கப்படுகிறது.

இதையும் படிங்க : சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சமூக நீதியை அடையலாம்: முதலமைச்சருக்கு வேல்முருகன் கோரிக்கை!

அதேபோல, இன்றைக்கு சேவைத் துறைகளில் பணிபுரியும் சுமார் 80 லட்சம் பணியாளர்களின் நிலை பற்றி அரசின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு பேசி, அதன் விளைவாக மத்திய அரசு அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் திட்டங்களை வகுக்க முன் வந்திருக்கிறது.

இதெல்லாம் சிவா அவர்களின் பெருமைகள் மட்டுமல்ல. சிவா மூலமாக திமுக அடையும் பெருமைகள். அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு திருச்சி சிவா உதாரணமாக, வழிகாட்டியாக இருக்கிறார்.

எதிர்பாராத திருப்பம் என்ற புத்தகத்தில் சிவா தன்னுடைய வாழ்க்கைப் பதிவுகளைப் பதிவு செய்திருக்கிறார். மேலும், புத்தகத்தில், 'தமிழனாக பிறந்தது சிறப்பு, கட்சியில் பணியாற்றுவது பெருமை, கலைஞரின் தொண்டராய் வாழ்வது பேறு'' என்று எழுதியிருக்கிறார். இவை வெறும் எழுத்தல்ல, காலத்திற்கும் நிலைத்திருக்கும் கல்வெட்டு.

ஒவ்வொரு திமுக தொண்டரும் தன் இதயத்தில் எழுதி வைத்திருக்க வேண்டிய சொற்கள். தமிழை விட, கட்சியை விட, கலைஞரை விட நமக்கு என்ன பெருமை வேண்டும்? என்னைப் பற்றி அவர் எழுதும்போது, 'கலைஞராய் வாழும் தளபதி' என்று எழுதி இருக்கிறார். என் மீதான அன்பு மிகுதியால் அப்படி எழுதி இருக்கிறார் சிவா.

என்னை 45 ஆண்டுகளாக பக்கத்தில் இருந்து பார்ப்பவர். இனி இவர்தான் எங்கள் தளபதி என்று முதலில் அறிவித்தவர் சிவாதான். அதனால் அந்த தலைப்பை வைத்திருக்கிறார். ஆனால், அதில் ஒரு திருத்தம் இருக்கிறது. கலைஞராய் வாழ கலைஞரால் மட்டும்தான் முடியும். என்னைப் பொருத்தவரை, கலைஞர் வழியில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.

இந்தப் புத்தகங்கள் வெளியீட்டு மூலமாக, எப்படி சிவா அவர்கள் வசீகரிக்கும் பேச்சுக்கு சொந்தக்காரரோ, அதே மாதிரி, சொக்க வைக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர் என்று நிரூபித்திருக்கிறார். இந்த நூல்களில் திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இருக்கிறது. நம்முடைய தலைவர்களின் வரலாறு இருக்கிறது. இயக்கத்தின் தியாகம் இருக்கிறது.

மொத்தத்தில், கட்சியினர் எப்படி பேச வேண்டும், எப்படி எழுத வேண்டும், எப்படி வாதிட வேண்டும், எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று வழிகாட்டும் புத்தகங்களாக இவற்றை திருச்சி சிவா உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
நாங்கள் கட்சிக்குள் அடியெடுத்து வைத்த காலத்திலும், நம் இன எதிரிகள் பொய்களையும், வதந்திகளையும் பரப்பிக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால், இன்றைக்கு பாஜகவினர் பொய்களையும், அவதூறுகளையும் பரப்புவது மட்டுமல்லாமல், அதை எப்படியெல்லாம் உண்மையாக மாற்றலாம் என்று யோசித்து, வரலாறுகளை மாற்றி எழுதுகிறார்கள். அவற்றை உடைத்தெறிய இன்னும் ஏராளமான திருச்சி சிவாக்கள் இந்த நாட்டுக்குத் தேவை. இந்த கட்சிக்குத் தேவை. இந்த நூல்கள் மாதிரி இன்னும் பல புத்தகங்கள் தேவை. இந்தப் புத்தகங்களை உருவாக்கித் தந்திருக்கும் நம் திருச்சி சிவா அவர்களை மீண்டும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.