சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையைக் கூட்டுவது குறித்து வருகிற 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், வருகிற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்புதல் அளிப்பதற்கும், தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: புதுப்பொலிவு பெறும் பொதிகை.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முக்கிய தகவல்!