சென்னை: நடப்பாண்டின் (2024) முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2024 - 2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
கடந்தாண்டு பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது உள்ளிட்ட நலத்திட்டங்கள் இடம்பெற்ற நிலையில், இந்தாண்டும் மகளிர் நலனை மேம்படுத்தும் நோக்கில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில், சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ரூ.26 கோடி மதிப்பீட்டில் மூன்று தோழி விடுதிகள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்திற்காக ரூ.3,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பெண்களின் வளர்ச்சிக்காக தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் கலைஞர் உரிமைத் தொகைக்கு ரூ.13,720 ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. அதேப்போன்று, 10 ஆயிரம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுமைப் பெண் திட்டம் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TN Budget Live Update: தமிழ்நாடு பட்ஜெட் 2024: முக்கிய அறிவிப்புகள் விவரம்!