ETV Bharat / state

பாஜக - தமாகா கூட்டணி முதற்கட்ட பேச்சுவார்த்தை; ஜி.கே.வாசன் 5 இடங்களை கேட்பதாக தகவல்!

BJP - Tamil Maanila Congress alliance: எல்.முருகன் தலைமையில் பாஜக - தமாகா இடையே நடைபெற்ற தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 4 மக்களவைத் தொகுதியும், 1 மாநிலங்களவை இடம் வேண்டும் என ஜி.கே.வாசன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமாகா - பாஜக கூட்டணி முதற்கட்ட பேச்சு வார்த்தை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 3:52 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.கவுடன் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இதனடிப்படையில் பா.ஜ.க, த.மா.கா கூட்டணி என்பது உறுதி செய்யபட்டது.

மேலும், பாஜக சார்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்பட ஏழு பேர் கொண்ட தேர்தல் குழு, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்தில் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையில், பாஜகவிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 4 மக்களவைத் தொகுதியும், 1 மாநிலங்களவை இடமும் கொடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற திங்கள்கிழமை நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்கப்பட்டுள்ள இடங்கள் ஒதுக்கப்படுவது தொடர்பாகவும், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணியில் இனைந்து கொள்ள மற்ற கட்சிகளும் வரும்பட்சத்தில், கூட்டணியில் இணையும் கட்சியில் எத்தனை தொகுதிகள் கேட்கிறார்கள் என்பதையும் பா.ஜ.க தேசிய தலைமையிடம் அறிவித்து முடிவு எட்டபடும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.