ETV Bharat / state

தேவகவுடா மகன் மற்றும் பேரன் மீதான பாலியல் குற்றச்சாட்டு..இந்தியாவிற்கே தலைகுனிவு - திருநாவுக்கரசர் எம்பி - Trichy MP Thirunavukarasar - TRICHY MP THIRUNAVUKARASAR

Trichy MP Thirunavukarasar: கர்நாடகாவில் தேவகவுடா மகன் மற்றும் பேரன் ஆகியோர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு மற்றும் கைது சம்பவம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளதாக திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Trichy MP Thirunavukarasar
திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி (Image credits: Etv bharat tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 10:00 AM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே கோடைக்காலத்தை ஒட்டி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்த திருச்சி எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் தரக்கூடியது. அவர் உடல் எரிக்கப்பட்ட விதத்தை வைத்து சந்தேகத்திற்குரிய மரணம் என்று கூறி வருகின்றனர்.

இதுபோல் சம்பவம் யாருக்கு நடந்தாலும் கண்டனத்திற்குரியது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதைக்கு யாராக இருந்தாலும் குற்றம் சாட்டப்படுபவர்கள் தான், நிரூபிக்கபட்ட பின் தான் அவர்கள் குற்றவாளி. காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் நடுநிலைமையாக செயல்படும். உரிய விசாரணைக்கு பின் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஏதும் சொல்ல முடியாது. கர்நாடகாவில் தேவகவுடா மகன் மற்றும் பேரன் ஆகியோர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு மற்றும் கைது சம்பவம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளது.

திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் பேட்டி (Video credits: Etv bharat tamilnadu)

இதனை நிரூபித்து குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். எந்த கட்சியையும் யாரும் அழித்துவிட முடியாது, தற்போது ஆட்சியில் இல்லாததால் அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. அதே போன்று, காங்கிரஸ் தற்போது ஆட்சியில் இல்லை, காங்கிரஸ் அழிந்தா போய்விட்டது எனக் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி தன்னுடைய பிரதமர் பதவியை மறந்துவிட்டு தரம் தாழ்ந்து பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவது கண்டனத்திற்குரியது. இரண்டு கட்ட தேர்தல் முடிவிலேயே இது போன்று அவர் பேசுகிறார். இதிலிருந்து தேர்தல் முடிவு என்ன என்பதை அவர் அறிந்து விட்டார்.

அடுத்தக் கட்டத் தேர்தலிலும் இன்னும் மோசமாக இஸ்லாமியரைப் பற்றி பிரதமர் பேசக்கூடிய சூழ்நிலை ஏற்படும். நான் திருச்சி தொகுதியில் 4.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கடந்த முறை வெற்றி பெற்றேன். தினசரி நாளிதழ் எடுத்த சர்வேயில் 39 எம்பிக்களில் சிறந்த எம்பியாக செயல்பட்டதாக எனக்கு முதலிடம் கொடுத்தார்கள்.

அப்படிப்பட்ட சூழலில் எனக்கு சீட் கொடுக்காதது வருத்தமாகத்தான் உள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூட எனக்கு சீட் கிடைக்காததால் வருத்தப்பட்டு பேசியதாக சொன்னார்கள். சொந்த மாவட்டம் என்பதால் அவர் பேசி இருப்பார், அதிமுக எங்களுக்கு எதிர்க்கட்சி தான், எதிரி கட்சி அல்ல.

அந்தவகையில் எனக்காக கட்சி பாகுபாடு இன்றி பலரும் வருத்தப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது தான் நான் காங்கிரஸில் சேர்ந்தேன். எந்த ஒரு பொறுப்பும் கேட்டு கட்சியில் சேரவில்லை, கட்சியில் சேர்ந்து ஆறாண்டு காலம் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் கட்சி பணி செய்தேன்.

அதற்கு பிறகு தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கிடைத்தது. அதற்குப் பிறகு தேர்தலில் நிற்க வாய்ப்பு அளித்தார்கள், வெற்றியடைந்தேன். ஆனால் தற்போது, அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை, கடவுள் கொடுக்க நினைப்பதை மனிதர்களால் தடுக்க முடியாது, கடவுள் கொடுக்க நினைக்காததை மனிதர்களால் கொடுக்க முடியாது. எது தர்மம், எது நியாயமோ அதுதான் வெல்லும். கடவுள் மற்றும் மக்கள் மீதும் நம்பிக்கை உள்ளவன் நான், பொறுப்பில் இருந்தாலும் இல்லை என்றாலும் நான் மக்கள் பணியாற்றுவேன்” என்றார்.

இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பு பணி வாங்கித் தருவதாக மோசடி.. சோழபுரம் வணிக சங்க தலைவர் கைது.. சிக்கியது எப்படி? - Money Cheating Case At Pudukkottai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.