ETV Bharat / state

ஓடும் ரயிலில் சாகசம்; மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்பட்ட மாணவருக்கு தீவிர சிகிச்சை! - STUDENT INJURED IN TRAIN

ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று தொங்கியபடி சாகசம் செய்த மாணவர், மின் கம்பத்தில் மோதி தூக்கியெறிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவருக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படிக்கட்டில் நின்று சாகசம் செய்யும் மாணவர்
படிக்கட்டில் நின்று சாகசம் செய்யும் மாணவர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2024, 4:34 PM IST

சென்னை: சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி மதியம் கல்லூரி முடித்துவிட்டு, தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். சுமார் 12:20 மணியளவில் ரயில் ராயபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் படியில் தொங்கியபடி சாகசம் செய்துள்ளார்.

ரயிலில் சென்ற படியே கம்பத்தை தொட்டு தொட்டு விபரீத செயலில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் அடிப்பட்டு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார். உடன் சென்ற நண்பர்கள், தனது நண்பன் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதை கண்டவுடன் அலறி துடித்தனர். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி சம்பவ இடத்திற்கு நண்பர்கள் வந்து பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் சுய நினைவின்றி கிடந்துள்ளார். பின்னர், ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை பிரான்ஸ் துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சோதனையில் அம்பலமான தகவல்!

அங்கு அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே சிறுவன் ரயிலில் ஏறி பயணம் செய்யும்போது சாகசத்தில் ஈடுபடுவதும் பின், மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்படும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராயபுரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Image Credits - ETV Tamilnadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.