ETV Bharat / state

பி.இ., பி.டெக் ., துணைக் கலந்தாய்வு இன்று துவக்கம்.. இட ஒதுக்கீடு எப்போது? - PE BTech Supplemental Consultation - PE BTECH SUPPLEMENTAL CONSULTATION

BE, B-Tech Supplemental Consultation:பிஇ, பிடெக் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வுக்கு இன்று முதல் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்து கொள்ளலாம் என மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கல்வி இயக்ககம்
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 8:51 PM IST

சென்னை: பிஇ, பிடெக் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 489 இடங்களுக்கு 3 ஆயிரத்து 783 மாணவர்களும், பொதுப்பிரிவு ஒதுக்கீட்டில் உள்ள 56 ஆயிரத்து 928 இடங்களுக்கு 11 ஆயிரத்து 769 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

துணைக்கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியலில் 199 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை மாணவி பவித்ரா பெற்றுள்ளார். பிஇ, பிடெக் பொறியியல் படிப்பிற்கான துணை கலந்தாய்விற்கு 28 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

அதில் பொதுப்பிரிவு கலந்தாய்விற்கு 12 ஆயிரத்து 313 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 11 ஆயிரத்து 769 மாணவர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களுக்காக 56 ஆயிரத்து 928 இடங்கள் காலியாக உள்ளது. பொதுப்பிரிவில் கலையியல் பிரிவில் 199 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று மாணவி பவித்ரா முதலிடம் பெற்றுள்ளார். தொழிற்கல்விப்பிரிவில் 178.5 கட் ஆப் மதிப்பெண் பெற்று மாணவர் அனிஷ் முதலிடம் பெற்றுள்ளார்.

அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டிற்கு 4501 விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 3 ஆயிரத்து 783 மாணவர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இந்த ஒதுக்கீட்டில் சேர்வதற்க 489 இடங்கள் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் மாணவி சன்மதி 195 மதிப்பெண்களும். தொழிற்கல்விப்பிரிவில் மாணவர் மோனிஷ் 166 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

துணைக் கலந்தாய்விற்கு இன்று (செப்டம்பர் 6) காலை 9 மணி முதல் நாளை மாலை 7 மணி வரையில், மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பர் 8 ஆம் தேதி தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும். அதனைத்தொடர்ந்து செப்டம்பர் 9 ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும் என மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பொறியியல் மூன்றாம் சுற்று கலந்தாய்வு; மொத்தம் எத்தனை இடங்களுக்கு அனுமதி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.