சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணியினர் ஜனவரி 30ஆம் தேதி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி, இன்று நாட்டின் மத நல்லிணக்கத்தை நோக்கி தனது துப்பாக்கியை நீட்டுகிறது. மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என பதிவிட்டுள்ளார்.
-
அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான இன்று, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது, சக அமைச்சர் பெருமக்கள் - கழக மூத்த நிர்வாகிகளுடன் பங்கேற்று மத நல்லிணக்க… pic.twitter.com/IzvfeXbZSC
— Udhay (@Udhaystalin) January 30, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான இன்று, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது, சக அமைச்சர் பெருமக்கள் - கழக மூத்த நிர்வாகிகளுடன் பங்கேற்று மத நல்லிணக்க… pic.twitter.com/IzvfeXbZSC
— Udhay (@Udhaystalin) January 30, 2024அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான இன்று, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது, சக அமைச்சர் பெருமக்கள் - கழக மூத்த நிர்வாகிகளுடன் பங்கேற்று மத நல்லிணக்க… pic.twitter.com/IzvfeXbZSC
— Udhay (@Udhaystalin) January 30, 2024
தற்போது இந்தியா பெற்ற சுதந்திரத்தின் வழி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இதன் ஆரம்பம் எங்கிருந்து என்று பார்க்கையில், கடந்த ஜன.23ஆம் தேதி நேதாஜியின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் இந்தப் அகிம்சை, ஆயுதம் என்று பேசினார். காட்டுத்தீப் போல் பரவிய ஆளுநரின் தகவல், மத இன கலவரம் போல் வித்திடத் தொடங்கியுள்ளது.
ஆளுநரின் கருத்து திரிக்கப்பட்டுள்ளது என்று ஒரு தரப்பும், ஆளுநர் வேண்டுமென்றே பிதற்றுகிறார் என்று மறு தரப்பும் மாறிமாறி குரல் எழுப்பி வருகிறது. கிட்டத்தட்ட அகிம்சைப் வழியா? ஆயுதப் வழியா? என்பதையே மையப்புள்ளியாகக் கொண்டு களமாடுகிறது இந்த விவாதம். இரண்டு தலைவர்களும் இந்தியாவின் சுதந்திரத்தையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் என்னவோ இருவரும் அவரவருக்கு சரியென தோன்றிய விதத்தில் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். ஆனால் சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இது பற்றிய விவாதம் தமிழ்நாட்டில் தற்போது முழைக்கத் துவங்கியுள்ளது.
திராவிட தலைவர்கள் மத்தியில் மையம் கொள்ளும் மகாத்மா காந்தி: கடந்த ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியா சுதந்திரம் பெற காங்கிரஸ் ஒரு சிறிய காரணம் மட்டுமே, 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியும், அவரது இந்திய தேசிய ராணுவத்தின் புரட்சியுமே காரணம்" என குறிப்பிட்டார்.
இந்நிலையில் தான், மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதா என ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் நீண்டன. காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை என கூறுவது வன்மம் கலந்த நோக்கம் என கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்தியடிகள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30ம் தேதியை மதநல்லிணக்க நாளாக தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும் என்று முன்மொழிந்து அறிக்கை வெளியிட்டார்.
-
ராஜ் பவன் செய்தி வெளியீடு எண். 07 pic.twitter.com/vL7OG0gI72
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 27, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ராஜ் பவன் செய்தி வெளியீடு எண். 07 pic.twitter.com/vL7OG0gI72
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 27, 2024ராஜ் பவன் செய்தி வெளியீடு எண். 07 pic.twitter.com/vL7OG0gI72
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 27, 2024
இவ்வாறு அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றார். முதலமைச்சரின் அறிக்கைப்படி இன்று(ஜன.30) காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் 'மதநல்லிணக்க நாளாக' அனுசரித்தனர். சென்னையில் மூத்த அமைச்சர்கள் உடனிருக்க, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மதநல்லிணக்க உறுதிமொழியேற்பு செய்யப்பட்டது. இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவாக வெளியிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், மதநல்லிணக்கத்தை காக்க வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
-
உண்மை - அமைதி - மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள் இது!
— M.K.Stalin (@mkstalin) January 30, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
காந்தியாரின் உயிரைத்தான் அந்த மனிதவிரோதக் கும்பலால் பறிக்க முடிந்ததே தவிர; அவர் நம்மிடையே விதைத்த சகோதரத்துவத்தை அல்ல!
அண்ணல்… pic.twitter.com/X6mfIftYy2
">உண்மை - அமைதி - மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள் இது!
— M.K.Stalin (@mkstalin) January 30, 2024
காந்தியாரின் உயிரைத்தான் அந்த மனிதவிரோதக் கும்பலால் பறிக்க முடிந்ததே தவிர; அவர் நம்மிடையே விதைத்த சகோதரத்துவத்தை அல்ல!
அண்ணல்… pic.twitter.com/X6mfIftYy2உண்மை - அமைதி - மதநல்லிணக்கம் ஆகியவற்றை விரும்பிய அண்ணல் காந்தியார் அவர்களை இந்திய மண்ணில் நிலவும் பன்முகத்தன்மைக்கு எதிரான கருத்தியல் கொன்ற நாள் இது!
— M.K.Stalin (@mkstalin) January 30, 2024
காந்தியாரின் உயிரைத்தான் அந்த மனிதவிரோதக் கும்பலால் பறிக்க முடிந்ததே தவிர; அவர் நம்மிடையே விதைத்த சகோதரத்துவத்தை அல்ல!
அண்ணல்… pic.twitter.com/X6mfIftYy2
இரண்டாம் உலகப்போரை ஆதரித்த அகிம்சை(மகாத்மா காந்தி).. நடந்தது என்ன?: இரண்டாம் உலகப்போரில் இன்று ஒன்றியமாக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் நேச நாடுகள், அச்சு நாடுகள் எனப் பிரிந்து மோதிக் கொண்டிருந்தன. குறிப்பாக ஹிட்லரின் ஜெர்மனிக்கு எதிராக வல்லரசு நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வரிந்து கட்டி நின்றன. இந்த உலகப் போரின் போது, நாஜி கட்சியினரின் யூதப்படுகொலைகள் உலகுக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. தொழில்நுட்ப சக்திகளோடு அசுரபலத்தோடு இருந்த போதும் ஜெர்மனியை தார்மீக ரீதியாக ஆதரிக்க இத்தாலி, ஜப்பானைத் தவிர்த்து அனைத்து நாடுகளுமே தயங்கின.
இந்த தருணத்தில் மகாத்மா காந்தியின் அரசியல் நிலைப்பாடு பெரும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. அகிம்சைக்கு பெயர் போன மகாத்மா காந்தி ஒரு போரை ஆதரித்தார் என்றால் அது ஜெர்மனிக்கு எதிரான போர் மட்டுமே. "If there ever could be a justifiable war in the name of and for humanity, a war against Germany, to prevent the wanton persecution of a whole race, would be completely justified." அதாவது "வரலாற்றில் நியாயப்படுத்தக் கூடிய போர் என ஒன்று இருக்குமானால், அது கண்டிப்பாக ஜெர்மனிக்கு எதிராக, ஒரு இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிரான நடத்தப்பட்ட போர், முழுமையாக நியாயப்படுத்தத் தக்கது" என்று 1938ஆம் ஆண்டு தனது அரிஜன் பத்திரிக்கையில் மகாத்மா காந்தி இவ்வாறு எழுதியிருந்தார். இந்த வரிகள் அந்நேரத்தில் உலகப் போர் மீதான காந்தியடிகளின் அரசியல் நிலைப்பாடாக இருந்தது.
ஆனால் நேதாஜியே இந்திய விடுதலைக்காக கிடைத்திருக்கும் சிறு வாய்ப்பையும் தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். முதலில் ஜெர்மனிக்கும் பின்னர் ஜப்பானுக்கும் சென்ற அவர், மலேசியாவிலிருந்து இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து பிரிட்டிஷ் இந்தியாவை நோக்கி படையெடுத்ததெல்லாம் வரலாறு. அன்றைய நாட்களில் மலேசியாவில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்களும், இந்த ராணுவத்தில் பங்கெடுத்தனர். தமது ராணுவத்தின் படைப்பிரிவு ஒன்றிற்கு மகாத்மா காந்தி பெயரையும் நேதாஜி சூட்டியிருந்தார் என்பதும் மறுக்கவும் மறைக்கப்படாத வரலாறு.
இவ்வாறு தமது பேச்சு அரசியல் பேசுபொருளாவதை உணர்ந்த ஆர்.என்.ரவி நேற்று (ஜன.29) மாலை தனது வார்த்தைகள் வேண்டுமென்றே திரிக்கப்பட்டு வெளியிடப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தேசத் தந்தையான மகாத்மா காந்தியிடமிருந்து பெற்ற கற்பிதங்கள் தமது வாழ்வின் ஆகச்சிறந்தவையாக உள்ளன என குறிப்பிட்டுள்ளார். நேதாஜியின் போர் நடவடிக்கைகள், ராணுவத்திலிருக்கும் இந்தியர்கள் மீது பிரிட்டீஷாருக்கு பயத்தை ஏற்படுத்தின எனவும், இதனால் தான் இந்திய விடுதலை துரிதமடைந்தது என்ற நோக்கில் தான் குறிப்பிட்டதாகவும் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
இப்படி ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள நிலையிலும், சுதந்திர போராட்ட அரசியல் சமகால அரசியலாக தமிழ்நாட்டில் மையம் கொண்டுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஜாக்டோ-ஜியோ அமைப்பு!