ETV Bharat / state

கிராமிய கலைகளை வளர்க்க அரசு செய்ய வேண்டியது என்ன? பத்ம ஸ்ரீ பத்திரப்பன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டி! - todays news in tamil

Coimbatore Valli Kummi Badrappan: ஆண்கள் மட்டுமே வள்ளி ஒயில் கும்மி ஆட வேண்டும் என்ற பாரம்பரிய கட்டுப்பாட்டை உடைத்து, பெண்களை வள்ளி கும்மி ஆட வைத்த பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த வள்ளி கும்மி ஆசிரியர் பத்திரப்பன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பத்ம ஸ்ரீ பத்திரப்பன் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 8:53 PM IST

பத்ம ஸ்ரீ பத்திரப்பன் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.பத்திரப்பன் (87). விவசாயத் தொழிலை ஒரு கண்ணாகவும் நாட்டுப்புறக் கலையை மற்றொரு கண்ணாகவும் நேசித்து வரும் இவர் இளம் வயது முதலே நாட்டுப்புறக் கலைகள் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

வள்ளி கும்மி, அரிச்சந்திரா கும்மி பாரதியார் வாழ்க்கை வரலாறு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆடல், பாடலுடன் நாட்டுப்புறக் கலைகளைக் கிராமம் கிராமமாகச் சென்று நடத்தி, நாட்டுப்புறக் கலைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

நாட்டுப்புறக் கலை என்பது இயல்பாகவே இந்த மண்ணில் உருவானது, இந்த கலை வடிவம் மூலம்தான் மற்ற செய்திகளை முந்தைய காலங்களில் மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கப்பட்டது என்று கூறும் இவர் 22 வயதிலிருந்தே நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார்.

மேட்டுப்பாளையம் அவிநாசி ஆகிய தாலுகாக்களில் உள்ள கிராமங்கள் தோறும் கிராமிய கலைஞர்களோடு நாட்டுப்புறக் கலைகளை இவர் கத்து கொடுத்து வந்துள்ளார். மேலும் கோவை வானொலியில் 24 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்.

நாட்டுப்புறக் கலையில் இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி இவருக்குக் கலை முதுமணி விருதும், தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது. தற்போது மத்திய அரசு பத்மஸ்ரீ விருதுக்கு இவரைத் தேர்வு செய்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இது குறித்து பத்திரப்பன் கூறுகையில், “நாட்டுப்புறக் கலை என்பது இயல்பாகவே நம் மண்ணில் உருவானது. இந்த கலை வடிவம் மூலம் தான் மற்ற செய்திகளை மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கப்பட்டது.

கடந்த 60 ஆண்டு காலமாக வள்ளி திருமண கதையைச் சொல்லி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறேன். அதே சமயத்தில் பாரதியார் வாழ்க்கை வரலாற்றையும் மக்களிடையே அடி பாடி பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். விஞ்ஞான வளர்ச்சியில் சுற்றுச்சூழல் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

பண்டைய காலத்தில் எவ்வாறு விவசாயப் பணிகள் ஈடுபட்டார்கள் என்பதைப் பாடல் மூலம் கற்றுக் கொடுத்து வருகிறேன். மக்கள் கலையாகக் கிராமிய கலைகள் இருந்தது. புராணக் கதைகளையும், பக்தி மார்க்கத்தையும், இதிகாசத்தையும் மக்களிடையே கொண்டு சென்றது கிராமிய கலை, மண்ணில் தோன்றிய முதல் கலை வடிவம்
விஞ்ஞான வளர்ச்சி வந்தவுடன் கிராமிய கலை மங்கி விட்டது.

விஞ்ஞானம் வளர்ந்து காட்சியாகக் கொண்டு சென்ற போது கிராமிய கலை குறித்து மக்கள் புரிந்து கொள்ளவில்லை. கிராமிய கலையை மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறிவிட்டோம். இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க முடியாமல் போனது நம்முடைய குறைபாடு, கலையோடது இல்லை. தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே கிராமிய கலைகள் உள்ளது.

புகழும் கிடையாது பணமும் கிடையாது: கிராமிய கலையில் வருமானம் இல்லை என்பதால் இதனைத் தவிர்த்து சினிமா போன்றவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர்.இதில் புகழும் இல்லை வரவும் இல்லை இந்த கலை குறித்து பெரியவர்களும் சிறியவர்களும் அறிந்து கொள்ள வேண்டும். மக்களுக்குக் கலை வடிவத்தில் நல்ல விஷயங்களைக் கொண்டு செல்ல வேண்டும் அதற்கான வாய்ப்பு உள்ளது.

அரசு கிராமிய கலைகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கு சுற்றுலாத்துறை, அறநிலையத்துறை, பண்பாட்டுத்துறை சார்பில் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தினால் கிராமிய கலை புத்துயிர் பெறும். இதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி உறுதிப்படுத்தினால் மக்களுக்குக் கலாச்சாரத்தை, பண்பாட்டைக் கிராமிய கலை மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்த முடியும். கிராமிய கலை ஒன்றுதான் மக்கள் முன்பாக நேரடியாக ஆடி பாடி சொல்லக்கூடிய ஒரே வடிவம்.

பெண்கள் வருகையால் அடுத்தகட்டத்திற்குச் செல்லும்: கிராமிய கலைகளை இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளனர். இதனால் ஈடுபாடு குறைகிறது. கடந்த சில ஆண்டுகளில் பெண்கள் இந்த கிராமிய கலைகளைக் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெண்களின் வரவு புதிய வரவு, இது எதிர்காலத்தில் கிராமிய கலைகளைப் பாதுகாத்து வளர்க்கப் பெரிய வாய்ப்பாக அமையும். அனைத்து துறைகளிலும் பெண்கள் உள்ளனர், தற்போது இந்த துறைக்கும் வந்துள்ளனர். ஆண்கள் மனநிலையிலிருந்து மாறி உள்ளனர். கிராமிய கலைகளைக் கற்றுக்கொள்ள எங்களை அனுமதிக்கின்றனர். இதுவே கலை வளர்வதற்கான முதல் அறிகுறி” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மயில் போல பொண்ணு ஒண்ணு கிளி போலப் பேச்சு ஒன்னு"..பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.