ETV Bharat / state

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்! - state about Assembly live telecast

Assembly live telecast: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து மற்ற மாநிலங்களிடம் தகவல்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அவை கிடைத்ததும் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 5:16 PM IST

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களிடம் தகவல் கோரப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் கிடைத்த பின் இது சம்பந்தமாக முடிவெடுக்கப்படும் என்றும் தமிழக அரசு இன்று (ஏப்.16) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்ட தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக, பல மாநிலங்களிடம் தகவல்கள் கோரப்பட்டன, அதில் சில மாநிலங்கள் பதிலளித்துள்ளன, சில மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. மேலும் நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார். முழுமையாகத் தகவல்கள் கிடைத்த பின் முடிவெடுக்கப்படும்”, என தெரிவித்தார்.

இதையடுத்து, எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏதேனும் ஒரு இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து, வழக்குகளின் விசாரணையை ஜூன் 25ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி மனு..நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு - Nainar Nagendran

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.