சென்னை: வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மகேஷ் என்ற அழைக்கப்படும் லிவிஷன், இவருக்குத் திருமணமாகி மூன்று வயதில் ஒரு மகனும் 11 மாதத்தில் குழந்தையும் உள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் தனது இருசக்கர வாகனத்தில் அவரது நண்பரை வீட்டில் இறக்கிவிட்டு வீடு திரும்பும் போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூளைச்சாவடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். மூளை சாவடைந்த இவரது உடலிலிருந்து, உறுப்புகளை குடும்பத்தினர் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டது. கல்லீரல், சிறுநீரகம், இருதயம், கண்கள் என மொத்தம் 7 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
இவர் உடல் உறுப்புக்கள் 5 உறுப்புகள் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கும், 2 உறுப்புகள் தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவரின் உடல் அரசு விதிமுறைகளின் படி தானமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த பின்பும் உயிர்களை வாழ வைக்கும் மகேஷின் உடலுக்குச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி மற்றும் மருத்துவ குழுவினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.