ETV Bharat / state

சம வேலைக்கு சம ஊதியம்; இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு.. காரணம் என்ன? - ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

SSTA protest postponed: சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோாிக்கையை வலியுறுத்தி 19 நாட்களாக போராடி வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 5:40 PM IST

Updated : Mar 8, 2024, 7:56 PM IST

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.

இதனை களையக் கோரி, கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது, எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண் 311-இல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

திமுக ஆட்சி அமைந்த பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023 புத்தாண்டின் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

இந்த நிலையிலும், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, பிப்ரவரி 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியாேருடன் இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும்போது, “இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 19 நாட்களாக சென்னையிலும், மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தி வருகிறோம்.

இன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்ககல்வித்துறை இயக்குனரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். தொடக்கப்பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதாலும், தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம்.

எங்கள் கோரிக்கையை முதல்வருக்கு கொண்டு சென்று பரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக முதலமைச்சர் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பர் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளி வேலை நாட்களில் நாங்கள் போராட்டம் நடத்தியது இல்லை. தற்போது தான் முதல்முறையாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

19 நாட்கள் போராடியதில் 12 நாட்கள்தான் பள்ளி வேலை நாள்களாக இருந்தது. எனவே, மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, கற்றல் இடைவெளியை சரிசெய்வோம். கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பையே சரிசெய்துள்ளோம். போராட்டம் நடத்திய நாட்களுக்கு விடுப்பு இருப்பதை அளிப்போம். அரசின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். அடுத்த வாரம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகப் பெண்ணின் காலில் மூன்று முறை விழுந்த பிரதமர் மோடி - காரணம் என்ன?

Last Updated : Mar 8, 2024, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.