ETV Bharat / state

நாளை மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்த SSTA! - SSTA State General Secretary Robert

SSTA Protest: சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் நாளை (பிப்.28) நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் போராட்ட வடிவத்தை மாற்றி தீவிரமாக போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

SSTA Protest
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 4:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.

இதை களையக் கோரி சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெறச்செய்தார்.

புதிய அரசு பதவி ஏற்ற பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023-ஆம் ஆண்டின் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

ஆனாலும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, 19-ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இத்தகைய சூழலில், இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "9 நாட்களாக தலைநகரில் கடும் முற்றுகைப் போராட்டம் செய்தும் அரசு கோரிக்கையை நிறைவேற்றாததால், நேற்று (பிப்.26) நடந்த மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை (பிப்.28) தமிழகம் முழுவதும் நடைபெறும் முற்றுகை போராட்டம்போல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

அரசு கோரிக்கையை நிறைவேற்றும் வரை அடுத்தகட்ட போராட்டங்களை அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் அரசு அழைத்துப் பேசி, சம வேலைக்கு சம ஊதிய கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், நாளை மறுநாள் (பிப்.29) முதல் போராட்ட வடிவமும், போர்க்களமும் இன்னும் உச்சபட்சமாக மாறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாளை மறுநாள் (பிப்.29) போராட்டம் குறித்து நாளை (பிப்.28) அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளனர்.

இதியும் படிங்க: கைதான ஜாஃபர் சாதிக்..! உண்மை இருக்குமேயானால்..அடுத்து இதுதான் என் முடிவு - இயக்குனர் அமீர் அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.