ETV Bharat / state

தமிழகத்தின் மலைப்பகுதியில் ஓடும் பேருந்துகள் விரைவில் புதிய பேருந்துகளாக மாற்றம் - அமைச்சர் சிவசங்கர் உறுதி!

Transport Minister: தமிழகத்தில் மலைப் பகுதியில் ஓடும் பேருந்துகள் விரைவில் புதிய பேருந்துகளாக மாற்றி இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Transport Minister
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 7:25 PM IST

Updated : Mar 5, 2024, 9:29 PM IST

அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை மலைப்பகுதிகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் 'விடியல் பயணத் திட்டத்தை' போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (மார்ச் 5) துவக்கி வைத்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, 200 பயனாளிகளுக்கு தையல் மெஷின் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கியது போல, இதுவரை மலைப் பகுதிகளில் வழங்கப்படாமல் இருந்ததை இன்றைக்கு வால்பாறை பகுதியிலே அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

வால்பாறை பகுதியில் இயங்குகின்ற 37 பேருந்துகளில் 19 பேருந்துகள் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் வழங்கும் பேருந்தாக அமையும். வால்பாறையைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில், 19 வழித்தடங்களும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் சராசரியாக ஒரு நாளைக்கு 80 லட்சம் பெண்கள் பயணிக்கிறார்கள். இந்த மலைப் பகுதிகளில் அதிகமானோர் பயணம் செய்கிறார்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது.

இந்த கட்டணமில்லா சேவை மூலமாக இன்னும் கூடுதலாக உயரும். பெண்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலமாக, மாதம் சராசரியாக ரூ.900 சேமிக்க வாய்ப்பு இருக்கும். எனவே, அவருடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய வலுவான அமைப்பாக இந்த திட்டம் அமையும்.

புதிய பேருந்துகள் வால்பாறைக்கு எப்போது வரும் என்ற கேள்விக்கு, ஏற்கனவே 4,000 பேருந்துகள் புதிதாக வாங்குவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான டெண்டர்கள் விடப்பட்டு, ஆணைகள் வழங்கப்பட்டு, பேருந்துகள் வர ஆரம்பித்துள்ளன. முன்னதாக, முதலமைச்சர் சென்னையில் 100 பேருந்துகளைத் துவக்கி வைத்தார்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 250 பேருந்துகள் அளவிற்கு, புதிய பேருந்துகள் வந்தன. கடந்த 15 ஆண்டுகள் ஓடிய பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டு 3,000 பேருந்துகள் வாங்க நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த திட்டத்தில் மலைப்பகுதியில் இயங்கக்கூடிய பேருந்துகள் எல்லாவற்றையும் புதிய பேருந்துகளாக மாற்றுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் திராட் ரூட் என்று சொல்லப்படுகின்ற பேருந்துகள் இயங்குகின்றன. அந்த பேருந்துகள் எல்லாம் இந்த ஆண்டு வழங்கப்படுகின்ற நிதியில் புதிய பேருந்துகளாக மாற்றப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் விடுபட்டு போனவர்களுக்கும், பணிக் காலத்தில் இறந்தவர்களுக்கும் வழங்க வேண்டிய ரூ.1,500 கோடி நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அரசு நிதியிலிருந்து ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் உள்ள நிலுவைத்தொகை விரைவில் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வால்பாறை நகரச் செயலாளர் குட்டி என்ற சுதாகர், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா மற்றும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மீண்டும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்தார் கனிமொழி !

Last Updated : Mar 5, 2024, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.