ETV Bharat / state

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு; ஏப்.29-க்கு ஒத்திவைப்பு! - Virudhunagar Women Court - VIRUDHUNAGAR WOMEN COURT

Virudhunagar Women Court: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி உள்பட 3 பேரும் வரும் 29ஆம் தேதிநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

Virudhunagar Women Court
Virudhunagar Women Court
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 5:36 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பின், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் முன்பு, மூவர் மீதும் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. 100க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. மேலும், இருதரப்பு வாதங்கள் மற்றும் விசாரணைகளும் நிறைவு பெற்றது.

இந்த வழக்கில் பலர் மீது குற்றச்சாட்டுகளும், பல்வேறு சந்தேகங்களும் எழுந்த நிலையில், கடைசியில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும் தான் குற்றவாளிகள் என இறுதி செய்து குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

3 பேருக்கும் எதிராக, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்திய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. கரோனா ஊரடங்கால் வழக்கு தொடர்பான விசாரணை தாமதமானது.

அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று (ஏப்.26) ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. முருகன் மற்றும் கருப்பசாமி மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வரும் 29ஆம் தேதி நிர்மலா தேவி உட்பட 3 பேரும் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது? சத்யபிரதா சாகு ஆலோசனை! - Strong Room Protection

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.